கிரேக்க இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு செபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கிரேக்கத்தின் வடபகுதியில் இரு இரயில்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 57பேர் வரை உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை மீண்டுமொருமுறை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் இதனைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக செபிப்பதாகவும், காயமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களோடு ஒருமைப்பாட்டை அறிவித்து அவர்களின் அருகாமையில் இருப்பதாகவும், அன்னை மரி அவர்களுக்கு ஆறுதலை வழங்குவாராக எனவும் கூறினார்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தவக்காலத் துவக்கத்தை முன்னிட்டு நீண்ட வாரஇறுதி விடுமுறைக்குப்பின் பல்கலைக்கழகம் திரும்பிக் கொண்டிருந்த இளையோருள் பலர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ATHENS நகருக்கு ஏறக்குறைய 380 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Larissa என்ற நகரில் பயணியர் இரயில் ஒன்றும் சரக்கு இரயில் ஒன்றும் செவ்வாய்க்கிழமை இரவு நேருக்கு நேர் மோதியதில் 57 பேர் வரை உயிழந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்