தேடுதல்

திருத்தந்தையின் நண்பர் Rabbi Abraham Skorka திருத்தந்தையின் நண்பர் Rabbi Abraham Skorka 

யூதர்களுடன் நட்புறவை ஏற்படுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தான் மேற்கொண்ட உரையாடல்களை “On Heaven and Earth"ன்ற புத்தகமாக வெளியிட்டும், அல்பேனிய தொலைக்காட்சிக்காக முப்பத்தொரு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தும் பணியாற்றியுள்ளார் Rabbi Abraham Skorka .

மெரினா ராஜ் - வத்திக்கான்

யூதர்கள் மற்றும் அவர்களது சமூக நிறுவனங்களுடன் உறவுகளையும் நட்பையும் கட்டியெழுப்புவதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நேர்மையான அர்ப்பணிப்பு உலகிற்கு சாட்சியமளிக்கின்றன என்று கூறியுள்ளார் திருத்தந்தையின் நண்பரான Rabbi Abraham Skorka

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவிற்கு தனது எண்ணங்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தையின் நீண்ட கால நண்பரும் “On Heaven and Earth” என்ற புத்தகத்தின் இணை ஆசிரியருமான Rabbi Abraham Skorka.

போனஸ் அயர்ஸின் கர்தினாலாக பேராயர் Jorge Mario Bergoglio தனது நகரத்தின் யூதர்களுடன் மிகவும் ஆழமான உறவைக் கொண்டிருந்தார் என்றும், ரபிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் தனிநபர்களுடன் திறந்த உரையாடல்களை வளர்த்துக் கொண்டு காலப்போக்கில் ஆழமான பல நட்புகளை வளர்த்துக் கொண்டார் என்றும் திருத்தந்தையைப் பற்றிக் கூறியுள்ளார் ஸ்கோர்கா.

வழக்கமான சமய உரையாடல்களின் அடிப்படையில் திருத்தந்தையுடனான நட்பை அனுபவித்து ஆசீர் பெற்றவர்களில் தானும் ஒருவர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்த ஸ்கோர்கா, திருத்தந்தையுடன் தான் மேற்கொண்ட உரையாடல்களை “On Heaven and Earth"ன்ற புத்தகமாக வெளியிட்டதையும், தொலைக்காட்சிக்காக முப்பத்தொரு நிகழ்ச்சிகளை அவருடன் பதிவு செய்துள்ளதையும் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.

1994-ஆம் ஆண்டில் போனஸ் அயர்ஸ் இல் உள்ள யூத சமூக மையத்தின் மீதான பயங்கரமான குண்டுவெடிப்புக்குப் பிறகு, உறுதியளித்து ஆதரவளிக்கும் ஒரு நிலையான ஆதாரமாக திருத்தந்தை இருந்தார் என்பதைக் குறிப்பிட்ட ஸ்கோர்கா, யூதர்கள் மற்றும் அவர்களது சமூக நிறுவனங்களுடன் உறவுகளையும் நட்பையும் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் திகழ்கின்றார் என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆண்டிற்குள், திருத்தூதுமடலான Evangelii gaudium வெளியீடு, மதங்களுக்கிடையிலான உறவுகள், மனித நேயம், ஒன்றிப்பு போன்றவற்றை வலியுறுத்தியவர் என்றும், மக்கள் மற்றும் மத மரபுகளுக்கு இடையேயான உரையாடல் முதன்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, யூத மக்களுடனான திருஅவை உறவுகள் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வெளிப்படுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும் கூறியுள்ளார் ஸ்கோர்கா.  

"இஸ்ரயேல் மக்களுடன் உரையாடல் மற்றும் நட்பு ஆகியவை இயேசுவின் சீடர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்", "கடவுள் பழைய உடன்படிக்கையின் மக்களிடையே தொடர்ந்து பணியாற்றுகிறார், அவர்களிடமிருந்து வரும் ஞானத்தின் கருவூலங்களை வெளிப்படுத்துகிறார்" என்ற திருத்தந்தையின் மறக்கமுடியாத வாக்கியங்களையும் நினைவுகூர்ந்த ஸ்கோர்கா, கத்தோலிக்கர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான உரையாடல் ஏன் மிகவும் முக்கியமானது என்பதை அவரது வார்த்தைகள் விளக்குகின்றன என்றும் கூறியுள்ளார்.

மற்ற மத மரபுகளுக்கு இடையிலான உரையாடல்களில் இணையாக இல்லாத வழிகளில் நமது புனித நூல்களில் கடவுளின் ஞானத்தை நாம் கண்டுணர முடியும் என்றும்  கூறியுள்ளார் ஸ்கோர்கா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2023, 14:13