தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

கருணையின் வல்லமையால் திருஅவை பெற்ற கனி

திருத்தந்தையின் பத்தாண்டு வழிகாட்டுதலில் முதன்மையாக நின்ற கருத்து, கருணை அல்லது இரக்கமே - வத்திக்கான் செய்திகள் துறையின் தலைவர் தொர்னியெல்லி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தந்தையாம் இறைவனின் முடிவற்ற கருணையின் வல்லமையால் திருஅவைப் பெற்றுள்ள அனுபவக் கனிகளைக் கொண்டு மற்றவர்களுக்கும் கருணைக்காட்டிவருவதை நேரடியாகக் காணமுடிகிறது என கூறியுள்ளார் வத்திக்கான் செய்திகளின் இயக்குனர் Andrea Tornielli.

திருத்தந்தையின் பத்தாண்டு பாப்பிறை பணிநிறைவை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளின் ஆசிரிய தலையங்கப் பகுதியில் குறிப்பிட்டுள்ள இயக்குனர், திருஅவை முதலிலேயே இறையன்பையும் கருணையையும் பெற்றுள்ளதால், அதனை மற்றவர்களுக்கு வழங்கும் முதல் அடியை எடுத்துவைப்பது இயல்பே எனவும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் மற்றவர்களை வரவேற்க முதல் அடியை எடுத்து வைக்கவேண்டிய கடமையை தன் முதல் திருத்தூது மடல் Evangelii Gaudium என்பதிலேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாமல்ல, மாறாக இயேசுவே ஒளியின் ஆதாரம் என்பதை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் தாங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்ட பாவிகள் என்பதை ஏற்று, சமூகத்தில் இறைவனின் கருணையை அனுபவித்து வாழவேண்டும் என்பதை திருத்தந்தை வலியுறுத்தி வந்துள்ளதையும் தன் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.

திருத்தந்தையின் பத்தாண்டு வழிகாட்டுதலில் முதன்மையாக நின்ற கருத்து, கருணை அல்லது இரக்கமே எனவும் மேலும் கூறியுள்ளார் வத்திக்கான் செய்திகள் துறையின் தலைவர் தொர்னியெல்லி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2023, 15:07