தேடுதல்

தென்சூடான் ஜூபாவில்  திருத்தந்தை பிரான்சிஸ் தென்சூடான் ஜூபாவில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

தென்சூடானை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

தென் சூடானின் ஜூபா பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் நண்பகல் 3.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 6.30க்கு வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை கின்சாசாவிலிருந்து புறப்பட்டு தென்சூடானின் ஜூபாவை நோக்கிப் பயணமானத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடானின் ஜூபா பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் நண்பகல் 3.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 6.30க்கு வந்தடைந்தார்.

தென்சூடானின் ஜூபாவை வந்தடைந்த திருத்தந்தையை ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் Dr Greenshields, Canterbury ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby, மற்றும் தென் சூடான் அரசுத்தலைவர் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்ட திருத்தந்தை தென்சூடான் அரசுத்தலைவைர் உடன் அரசுத்தலைவர் மாளிகையை வந்தடைந்தார். அதன்பின் அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள் சமூகத்தலைவர்கள் ஆகியோர் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபின்னர் ஜூபா உள்ளூர் நேரம் 5 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு அரசுத்தலைவர் மாளிகை தோட்டவளாகத்தில் சந்தித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்சூடான் குடியரசின் தலைநகரமான ஜூபா கூட்டாட்சி மாநிலமாக 14 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ள வெள்ளை நைல்  நதி மற்றும் ஏறக்குறைய 16,000 கிமீ க்கும் அதிகமான பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கொண்ட பாண்டிங்கிலோ தேசிய பூங்காவைக் கொண்டதாகவும் திகழ்கின்றது. வணிக மையம் மற்றும் நதி துறைமுகமாகவும் திகழும் ஜூபாவில்  ஒரு விமான நிலையம் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளது 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2023, 14:34