தேடுதல்

சாம்பல் புதன் வழிபாட்டின் போது திருத்தந்தை பிரான்சிஸ் சாம்பல் புதன் வழிபாட்டின் போது திருத்தந்தை பிரான்சிஸ் 

கடவுள் பரிசுக்கு பதிலளிக்கும் காலம் தவக்காலம் – திருத்தந்தை

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது - எபிரேயர்: 4: 12

மெரினா ராஜ் – வத்திக்கான்

உயிருள்ள மற்றும் ஆற்றல் மிக்க இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வதன் வழியாக  இத்தவக்காலத்தில் கடவுளின் பரிசுக்குப் பதிலளிக்க நாம் அழைக்கப்படுகின்றோம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 25 சனிக்கிழமை ஹாஸ்டாக் தவக்காலம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் 4: 12  உள்ள “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது” என்பதை மேற்கோள்காட்டி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தவக்காலத்தின் போது உயிரும் செயலும் கொண்ட இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வதன் வழியாக வாழ்வென்னும் கடவுளின் பரிசுக்கு நாம் பதிலளிக்க நாம் அழைக்கப்படுகின்றோம். கடவுளின் வார்த்தைக்கு அன்றாடம் செவிமடுக்கும் போது, நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாகவும், அவரது வேலையில் பணிவுடையவர்களாகவும், மாறி நம் வாழ்வில் நிறைய பலன்களைப் பெறுகின்றோம் என்பதே அக்குறுஞ்செய்தி உணர்த்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2023, 13:22