தவக்காலத்தில் இயேசுவின் தெய்வீக மகிமையை அனுபவிப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அன்பான சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியானவர் இவ்வாண்டின் தவக்காலத்தில் இயேசுவுடன் நம்மைத் தக்கவைக்கட்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 22, இப்புதனன்று, தான் வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தத் தவக்காலத்தில் நாம் இயேசுவின் தெய்வீக மகிமையை அனுபவிப்போம் என்றும் இதனால், நமது இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு, அவருடனான நமது பயணத்தில் விடாமுயற்சியுடன் மக்களின் மாண்பு மற்றும் தேசத்தின் ஒளியை நோக்கி ஒன்றிணைந்து செல்வோம் என்றும் கூறியுள்ளார்.
தவக்காலம் தொடங்குவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக, அதாவது, பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமையன்று, தவக்காலம், இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் காலமாகவும் அருளின் காலமாகவும் இருக்க வேண்டும் என்றும், அனைத்திற்கும் மேலாக நம்முடன் பயணிக்கும் மனிதர்களில் வாழும் கடவுளின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்