நீதி மற்றும் அமைதிக்கான வழிகளைத் தேடுவோம் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நிக்கராகுவா நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களின் இதயங்களும் உண்மை, சுதந்திரம் மற்றும் உரையாடலை உள்ளடக்கிய அமைதி மற்றும் நேர்மைக்கான வழிகளைத் தேடவேண்டும் என அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்ரவரி 12, இஞ்ஞாயிறன்று, தான் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அதிகம் அன்புகூரும் ஆயர் Rolando José Álvarez அவர்களுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அதிகம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆயர் Álvarez-காகவும், மேலும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட 222 சிறைக்கைதிகளுக்காகவும், அன்புக்குரிய நாடான நிக்கராகுவாவில் துன்புறும் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 10, வெள்ளிக்கிழமையன்று, மனாகுவாவில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அரசியல் காரணங்களுக்காக 222 சிறைக்கைதிகள் நிக்கராகுவா நீதி மன்ற தீர்ப்பிற்குப் பிறகு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதில் 5 அருள்பணியாளர்கள், ஒரு திருத்தொண்டர், 2 அருள்பணித்துவ மாணவர்களும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து 56 வயதான ஆயர் Álvarez அவர்களுக்கு 26 ஆண்டுகள், நிக்கராகுவா நீதிமன்றம் சிறைதண்டனை விதித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்