அறிவியல், பிறர்மீதான அக்கறையை உருவாக்க வேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மற்றவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நமது முந்தய கலாச்சாரத்திற்கு இன்று நாம் திரும்ப வேண்டும் என்பதே நமது முக்கிய பொறுப்பாக உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்ரவரி 23, இவ்வியாழனன்று, Max Planck அமைப்பின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவியல் தரும் துயரமான விளைவுகளை திருஅவை ஒருபோது ஏற்றுக்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தினார்.
Max Planck அமைப்பை எப்போதும் போல, அறிவியல் ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க தான் ஊக்குவிப்பதாகவும், இதன்விளைவாக, அது அரசியல் அல்லது பொருளாதார இயல்புகளில் முறையற்ற தாக்கங்களிலிருந்து விடுபட முடியும் என்றும், தொடக்க ஆராய்ச்சி முதல் முடிவுகளை வெளியிடுவது மற்றும் அவை பயன்படுத்தப்படும் விதம் வரை அறிவியல் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் இது இன்றியமையாத தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் காலத்தில், முழு அறிவியலுக்கான ஆதரவு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், முடிந்தால் அது அதிகரிக்கபட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையில், பயன்பாட்டு அறிவியலுக்கு பாரபட்சம் இல்லாமல், முழு அறிவியலை ஒரு பொது நன்மையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதன் பங்களிப்புகள் பொது நலனுக்கான பணியில் வைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்தார்.
மனித அறிவாற்றல் திறன் மற்றும் இயந்திரங்களின் கணக்கீட்டு வலிமை ஆகியவற்றுக்கு இடையேயான இணைவு Homo sapiens இனத்தை கணிசமாக மாற்றியமைக்க முடியும் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்
பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் துண்டிக்கப்பட்டால், அவ்வாறு செய்வதில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றும், உள்நோக்கம் மற்றும் அதன் வழியாக செயலின் நெறிமுறைத் தன்மை நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விவாதத்திற்கு Max Planck அமைப்பு ஒரு அடிப்படை பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்