நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி   (AFP or licensors)

இயற்கை சீற்றங்களால் துயருறுவோரை நினைவுகூர்வோம்

துயருறுவோரை மறந்துவிடாமல், நமது பணிகள் மிகவும் அக்கறை நிறைந்ததாகவும், உறுதியானதாகவும் இருக்கட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

​​துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், உக்ரைன் போர் மற்றும் நியூசிலாந்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி 19, இஞ்ஞாயிறன்று, தனது மூவேளை செபயுரையின்போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இயேசுவின் அன்பு, துயருறும் மக்களால் நம்மைத் தொட அனுமதிக்கும்படி கேட்கிறது" என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ளோரையும், போர், வறுமை, சுதந்திரமின்மை அல்லது சுற்றுச்சூழல் அழிவுகளால் பாதிக்கப்படும் அன்பான உக்ரேனிய மக்களைத் தான் நினைவு கூர்வதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மைய நாட்களில் பேரழிவுகரமான சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து மக்களுடன் தான்  நெருக்கமாக இருக்கிறேன் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சகோதரர் சகோதரிகளே, துயருறுவோரை மறந்துவிடாமல், நமது பணிகள் மிகவும் அக்கறை நிறைந்ததாகவும்,  உறுதியானதாகவும் இருக்கட்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நியூசிலாந்தில் 'கேப்ரியல்' சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இஞ்ஞாயிறன்று 11 ஆக உயர்ந்துள்ளதுடன், நாட்டின் வடக்குத் தீவை புயல் தாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை எட்டியுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2023, 14:26