தவக்கால ஒருவாரத் தியானத்தில் திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு கொண்டாட்டங்களுக்கான தயாரிப்பாக, தவக்காலத்தின் முதல் வாரத்தில் திருத்தந்தையும் திருப்பீட உயர் அதிகாரிகளும் தியான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதால், இவ்வார புதன் மறைக்கல்வியுரை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையும் திருப்பீட உயர் அதிகாரிகளும் இவ்வாரத்தில் தனிப்பட்டமுறையில் தியான முயற்சிகளை மேற்கொள்வர் என உரைக்கும் திருப்பீட அறிக்கை, கடந்த மாதமே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஒருவார ஜெப முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.
பிப்ரவரி 26ஆம் தேதி ஞாயிறு பிற்பகலில் துவங்கிய இத்தியான முயற்சி, மார்ச் 3ஆம் தேதி வெள்ளி பிற்பகலில் நிறைவுக்கு வரும். இவ்வாரம் முழுவதும் எவ்வித பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 5ஆம் தேதியன்று ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்குவார்.
ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் துவக்கத்தில் திருப்பீட உயர் அதிகாரிகளுடன் இணைந்து ஒருவார தியானத்தில் திருத்தந்தை ஈடுபடுவது வழக்கம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்