அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க, இதயத்தோடு கூடிய உரையாடல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
போர் இடம்பெறும் இடங்களில் அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க, இதயத்தோடு உரையாடுதல் இன்றியமையாதது என்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக சமூகத்தொடர்பு நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் காணப்படும் கருத்துக்களை மையமாக வைத்து சனவரி 24, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், போர் இடம்பெறும் இடங்களில் அமைதியின் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இதயத்தோடு பேசுவதும், பகைமையும் வெறுப்பும் நிலவும் இடங்களில் பேச்சுவார்த்தைகளையும் ஒப்புரவையும் அனுமதிக்கும் பாதைகளைத் திறக்கவும் எக்காலத்தையும் விட இக்காலத்தில் தேவை அதிகம் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
நாம் உண்மையைத் தேடி, அதைப் பேசி, அதை பிறரன்பில் செயல்படுத்தவேண்டும் என தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2012ஆம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 19ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட டுவிட்டர் செய்திகள் வழங்கும் திட்டத்தில், இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் 4640 டுவிட்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை இதுவரை 1 கோடியே 89 இலட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்