தேடுதல்

உரோம் மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருத்தூதுப் பயணத்தை அன்னை மரியாவிடம் ஒப்படைத்த திருத்தந்தை

காங்கோ குடியரசுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது திருத்தந்தையும், தென்சூடான் நாட்டிற்கு திருப்பயணம் செய்யும் முதல் திருத்தந்தையும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது

மெரினா ராஜ் – வத்திக்கான்

உரோமில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு சென்று காங்கோ மற்றும் தென்சூடானுக்கான தனது  பயணத்தை அன்னை மரியாவிடம் ஒப்படைத்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 31 செவ்வாய் கிழமை தனது 40வது திருத்தூதுப் பயணத்திற்குப் புறப்பட்ட திருத்தந்தை, அப்பயணத்தை அன்னைமரியாவிடம் ஒப்படைத்து செபிப்பதற்காக சனவரி 30 திங்கள் கிழமை மாலை உரோமின் புனித மேரி மேஜர்  பெருங்கோவில் சென்றார்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் காங்கோ குடியரசு நாடுகளுக்கு 1980 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் முதன் முதலில் திருப்பயணம் செய்த முதல் திருத்தந்தையாவார். அவரைத் தொடர்ந்து இம்முறை காங்கோ குடியரசு நாடுகளுக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரண்டாவது திருத்தந்தையாவார்.

திருத்தந்தை புறப்படுவதற்கு முன்னர் இரு நாட்டு மக்களுக்கும் எழுதிய கடிதத்தில், காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதிகள் ஆயுத மோதல்கள் மற்றும் சுரண்டல்களால் பாதிக்கப்படுகிறது என்றும், தென்சூடான் பல ஆண்டுகாலப் போரினால் சிதைந்துள்ளது என்றும், பல மக்களை குடிபெயர வைத்து பெரும் கஷ்டமான சூழ்நிலையில் வாழத் தூண்டும் தொடர்ச்சியான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தென்சூடான் ஏங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

காங்கோ குடியரசு நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது திருத்தந்தையும், தென்சூடான் நாட்டிற்கு முதலில் திருப்பயணம் செய்யும் திருத்தந்தையும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2023, 13:00