திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

வார்த்தையால் அல்ல செயலால் அன்பு செய்யும் கடவுள் - திருத்தந்தை

மரியாவின் வழியாக நம்மைப் போல மனித உரு எடுத்த கிறிஸ்துவின் இதயம் மனிதர்கள் ஒவ்வொருவருக்காகவும் துடிக்கின்றது. - திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுள் நம்மை வார்த்தையினால் அல்ல, மாறாக செயலினால் அன்பு செய்கின்றார் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 02, இத்திங்களன்று கடவுளின் இதயம் மனிதர்கள் ஒவ்வொருவருக்காகவும் துடிக்கின்றது என்பதை வலியுறுத்தி குறுஞ்செய்தியினை பதிவு செய்துள்ள திருத்தந்தை. கிறிஸ்துவின் இதயம் மனிதர்கள் ஒவ்வொருவருக்காகவும் துடிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் நம்மை வார்த்தையால் அல்ல செயலால் அன்பு செய்கின்றார். மேலே உயரத்தில் தொலைவில் அல்ல மாறாக கீழே நம் அருகில் இருந்து நம்மை அன்பு செய்கின்றார்  என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மரியாவின் வழியாக நம்மைப் போல மனித உரு எடுத்த கிறிஸ்துவின் இதயம் மனிதர்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து துடிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2023, 15:40