தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

பிளவுகளுக்குத் தீர்வு கடவுளிடமிருந்து வருகின்றது – திருத்தந்தை

உண்மையான தீர்வு என்பது கடவுளிடம் இருந்து அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை போன்றவற்றைக் கேட்பதன் வழியாகக் கிடைக்கக் கூடியது – திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிளவுகளுக்குத் தீர்வு கடவுளிடமிருந்தே வருகின்றது என்றும் கருத்து வேறுபாடுகள் அதிக முரண்பாடுகளை உருவாக்குகின்றன என்றும், தனது டிடுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 23 திங்கள் கிழமை திருஅவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் ஆறாம் நாளை முன்னிட்டு ஹாஸ்டாக் கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம் என்ற தலைப்பில் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிளவுகளுக்குத் தீர்வு மற்றொரு மனிதரை எதிர்ப்பதல்ல, உண்மையான தீர்வு என்பது கடவுளிடம் இருந்து அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை போன்றவற்றைக் கேட்பதன் வழியாகக் கிடைக்கக் கூடியது என்றும், உடன் வாழும் மனிதர்களோடு ஏற்படுத்தும் கருத்து வேறூபாடு முரண்பாடுகளையே ஏற்படுத்துகின்றது என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2023, 12:39