கீழைவழிபாட்டுமுறைத் திருஅவைக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து -திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறைமகனின் பிறப்பானது ஆறுதல், நம்பிக்கை மற்றும் அமைதியை உண்டாக்கட்டும் என்று, கீழைவழிபாட்டுமுறைத் திருஅவையினருக்குத் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைக் கூறி டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 07, சனிக்கிழமையன்று, ஜூலியன் நாள்காட்டியைப் பயன்படுத்தி கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடும் கீழை வழிபாட்டுமுறைக் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் மக்களுக்கு வாழ்த்து கூறி டுவிட்டர் செய்தியளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் மக்களுக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் செபிக்க வலியுறுத்தியுள்ளார்.
இறைமகனின் பிறப்பு ஆறுதல், நம்பிக்கை மற்றும் அமைதியை நம்மில் உண்டாக்கட்டும் என்றும், போரின் முடிவானது அமைதியை நோக்கி இட்டுச்செல்லும் உறுதியான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கவேண்டும் என்றும், உக்ரேன் நாட்டு மக்களின் அமைதிக்காக இன்னும் அதிகமாக செபிக்கவேண்டும் என்றும் அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்