தேடுதல்

இத்தாலிய கைப்பந்து விளையாட்டுக் கூட்டமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலிய கைப்பந்து விளையாட்டுக் கூட்டமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்.   (ANSA)

விளையாட்டில் தாழ்ச்சி, பொறுமை ஆகியவை முக்கியம் வாய்ந்தவை

பணம், எப்படியும் வெற்றியடையவேண்டும் என்ற வெறி போன்றவைகள் விளையாட்டு வீர்ரகளுக்குள் புகுந்துவிடக்கூடாது – திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் தினசரி நடவடிக்கைகளில் முனைப்பு பொறுப்புணர்வு மற்றும், ஈடுபாடுடையவர்களாக செயல்படுவதுபோல் விளையாட்டு வீரர்களும் தாங்கள் ஈடுபடும் விளையாட்டில் செயல்படவேண்டும் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 30, திங்கள்கிழமை, இத்தாலிய கைப்பந்து விளையாட்டுக் கூட்டமைப்பின் அங்கத்தினர்களை வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டு என்பது ஒருவர் தன் கூச்ச சுபாவத்திலிருந்து வெளிவரவும், தன்விழிப்புணர்வுக் குறித்தவைகளில் முதிர்ச்சியடையவும் உதவுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கைப்பந்து விளையாட்டு என்பது, ஒருவர் மற்றவரின் ஆலோசனைகளைக் கேட்டு ஒரு குழுவாக வெற்றி காணப்படவேண்டியது என்பதையும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டில் தாழ்ச்சியுணர்வு, பொறுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

உடன் இணைந்து செல்லும் வழிகாட்டி இல்லாமல் எவரும் விளையாட்டு வீரராக மாறமுடியாது என்ற திருத்தந்தை, விளையாட்டில் போட்டி மனப்பான்மை என்பது ஆரோக்கியமானதாக வளர்க்கப்பட வேண்டும் எனவும்,  தியாகம், விடாமுயற்சி, பயிற்சி என்ற நல்லவைகளை விளையாட்டு வளர்த்தெடுக்கிறது எனவும் கூறினார்.

பணம், மற்றும், எப்படியும் வெற்றியடையவேண்டும் என்ற வெறி விளையாட்டு வீரகளுக்குள் புகுந்துவிடக்கூடாது என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் எடுத்துக்காட்டாக இருக்கும் பிரபல விளையாட்டு வீரர்கள் ஒரு நாளும் அவர்களை ஏமாற்றுபவர்களாக மாறிவிடக்கூடாது என்பதையும் இத்தாலிய கைப்பந்து விளையாட்டு கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2023, 14:50