தேடுதல்

உறுப்பினர்களைச் சந்திக்கும் திருத்தந்தை உறுப்பினர்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

அமைதிக்கான தேடலில் பெண்கள் அதிகம் ஈடுபடுத்தப்பட வேண்டும்

கத்தோலிக்கத் திருஅவையானது மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் பல்வேறு மத மரபுகளைப் பின்பற்றுபவர்களிடையே புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உறுதிசெய்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பெண்கள் உலகிற்கு அக்கறையையும் வாழ்க்கையையும் வழங்குகிறார்கள் என்றும், அவர்களே அமைதிக்கான பாதையாகவும் திகழ்கிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 26, இவ்வியாழனன்று, ‘பெண்கள் மதங்களுக்கு இடையே கலாச்சார சந்திப்புகளை உருவாக்குகிறார்கள்’ என்ற தலைப்பில் நிகழும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான வத்திக்கான் துறையின் உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்கள் கலந்துரையாடல் பெண்களின் அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்களைக் கேட்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் சிறப்புமிக்கது, ஏனெனில் "நமது அமைதிக்கான தேடலில் பெண்களும் அதிகம் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களே அமைதிக்கான பாதையாகவும் திகழ்கிறார்கள் என்றும் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையானது மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் பல்வேறு மத மரபுகளைப் பின்பற்றுபவர்களிடையே புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உறுதிசெய்துள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களின் ஒவ்வொரு மரபும், நீங்கள் ஒவ்வொருவரும், உலகத்தை அரவணைப்பு, குணப்படுத்துதல் மற்றும் உடன்பிறந்த உறவு ஆகியவற்றின் உணர்வைக் கொண்டு அதை வழங்குவதற்கான ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த முக்கியமான பணியை நீங்கள் ஒன்றாகத் தொடர்ந்தாற்றிட நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும்,   ​​உங்களுக்கு வலிமையையும் படைப்பாற்றலையும் தரும் நுண்ணறிவையும் நடைமுறைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மாண்பை வளர்ப்பதற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிக்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2023, 14:14