தேடுதல்

ஸ்லோவாக்கியாவில் இளையோரைச் சந்திக்கும் திருத்தந்தை (கோப்புப்படம்) ஸ்லோவாக்கியாவில் இளையோரைச் சந்திக்கும் திருத்தந்தை (கோப்புப்படம்)  

இளையோரை கவனிப்பது எல்லைகடந்த பணி : திருத்தந்தை

இளையோர் கொண்டுவரும் ஒன்றிணைந்த கலாச்சாரத்திற்கான சூழலால் உங்கள் இல்லங்கள் நிரப்பப்படப்போகின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பல்வேறு நாடுகளை சேர்ந்த இளையோருக்கு நீங்கள் கொடுக்கவிருக்கும் விருந்தோம்பலானது, எல்லை கடந்து சென்று புதிய வழியில் பணியாற்றும் கிறிஸ்தவர்களாக இருக்கமுடியும் என்பதற்கான அடையாளம் என்றும் உங்கள் எல்லைகளைத் திறக்கும் உலகளாவியமயமாக்கல் என்று இதனை அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 25, இப்புதனன்று, உலக இளையோர் தின நாளன்று, இளையோருக்கு விருந்தளிக்கவிருக்கும் குடும்பங்களுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது மிகவும் கடினமான பணியாக இருந்தபோதிலும், எல்லை கடந்த ஒரு பணியாக இருக்கப் போகின்றது என்றும் நம்ம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் இளம் உறவினர்கள், குழந்தைகள் போன்ற இவ்விளையோருக்கு விருந்தளிக்கப் போவதும், அவர்களை வீட்டில் வைத்திருக்கப்போவதும் உங்களுக்கு ஒரு புது அனுபவமாகவும் புரட்சி நிறைந்ததாகவும் இருக்கும் என்றும் அக்குடும்பங்களைப் பாராட்டியுள்ள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்கள் இல்லங்களுக்கு வரும் இந்த இளைஞர்கள் உங்களுக்குப் பிரச்சனைகள், வசசியற்ற நிலைகள் மற்றும் வேலைகளை கொண்டு வரப் போகிறார்கள் என்றாலும், புதிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் விதைகளை உங்களை இல்லங்களில் விதைக்கப் போகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்களின் ஒவ்வொரு குடும்பமும் ஒன்றிரண்டு இளையோரைத்தான் கவனித்துக்கொள்ளப்போகின்றது என்றாலும், அவர்கள் கொண்டுவரும் அனைத்துலக கலாச்சாரத்திற்கான சூழலால் உங்கள் இல்லங்கள் நிரப்பப்படப்போகின்றன என்றும், அது உங்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2023, 13:39