தேடுதல்

Assifero அமைப்பின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை Assifero அமைப்பின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

ஏழையின் உருவில் கிறிஸ்து நம்மைச் சந்திக்க வந்தார் : திருத்தந்தை

புறந்தள்ளப்பட்ட ஏழை எளிய மக்களுடன் நெருக்கமாக இருப்பதே, உறுதியான சமூகங்களைக் கட்டியெழுப்ப ஒரு நல்ல அடித்தளத்தை அமைப்பதற்கு உதவும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புறந்தள்ளப்பட்டோருடன் இறுதிவரை வரை நெருக்கமாக இருப்பது, அவர்களின் காயங்களுக்கு மருந்திடுவது, அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்பது ஆகியவை, ஒரு சிறந்த உலகத்திற்கான ஒன்றுபட்ட மற்றும் உறுதியான சமூகங்களைக் கட்டியெழுப்ப உதவும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 26, இவ்வியாழனன்று, உரைமையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் Assifero என்ற அமைப்பின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது  இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று மதிப்பீடுகளை அவர்களிடம் வலியுறுத்தினார்.

முதலாவதாக, ஒரு நபரின் அடிப்படை பரிமாணங்களில், அதாவது,  பொருள், அறிவுசார், தார்மீக மற்றும் ஆன்மிகத்தில் ஒருங்கிணைந்த நன்மையை மேம்படுத்துதல் அவசியம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையில், பொருள் உதவி என்பது தனிநபர் மற்றும் சமூக நிலையில், அவர்களின் திறன்களை வளர்த்து மக்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இரண்டாவதாக, உள்ளூர் மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது. இது மிகவும் முக்கியமானது, அதாவது உங்களின் பணி அல்லது ஈடுபாடு என்பது ஆங்காங்கே உதவி என்ற நிலையில் மட்டும் குறைந்துவிடாமல் மக்கள் வாழும் இடங்களில் எதிர்காலத்திற்கான விதைகளை விதைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்றாவதாக, புறந்தள்ளப்பட்ட ஏழை எளிய மக்களுடன் நெருக்கமாக இருப்பது. இதுவே உறுதியான சமூகங்களைக் கட்டியெழுப்ப ஒரு நல்ல அடித்தளத்தை அமைப்பதற்கு உதவும் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் என்றுமுள்ள இறையாட்சியைக் காட்டிட கிறிஸ்து ஒரு ஏழையின் உருவில் தன்னை ஏழையாக்கிக்கொண்டு நம்மைச் சந்திக்க வந்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2023, 14:04