எதிர்மறையை நேர்மறையாக மாற்றுங்கள் - திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
சந்திப்பு, பகிர்வு மற்றும் ஒற்றுமைக்குத் திறந்த மனதுடன் இருக்கும்போது, தங்களது சொந்த மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் ஒவ்வொருவரும் காண முடியும் என்றும் எதிர்மறையை நேர்மறையாக மாற்ற தொடர்ந்து முயலுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 21 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் போரினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீர்ர்களுக்கு பணிபுரியும் தேசிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 200 பேரை சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சூழ்நிலைகளினாலும் சமூக வரம்புகளினாலும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்விற்கு சமூக அர்த்தத்தை வழங்குவதற்காக பணிபுரியும் அவ்வொன்றிய உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் இத்தகைய உறுதியானது சிறந்த ஆன்மீக மதிப்பின் ஒரு பகுதியாகும் என்றும் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கண்டறிந்து தங்களது சொந்த மாற்றத்தை உருவாக்குகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
நல்ல ஆயனின் உருவத்துடன் அவ்வொன்றிய உறுப்பினர்கள் தனக்கு வழங்கிய சிலுவைக்காக நன்றி தெரிவித்த திருத்தந்தை, எதிர்மறையான அனுபவத்திற்கு நேர்மறையான செயல்களைச் செய்யும் அவர்களின் பணியானது கடவுளன்பின் வல்லமையால், தீமையை நன்மையாக மாற்றிய இயேசுவினது வாழ்வின் மறைபொருள் மையத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
அமைதியை ஏற்படுத்துபவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவார்கள் என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி அவ்வொன்றிய உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை, தீமையை நன்மையாகவும், வெறுப்பை அன்பாகவும், வன்முறையை நற்குணமாகவும் மாற்றிய இயேசுவை தங்களது அமைதியான அர்ப்பணிப்பால் அவ்வொன்றிய உறுப்பினர்கள் தொடர்ந்து பிரதிபலிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
போரை எதிர்கொள்ள, செபிப்பதைத் தொடர்முயற்சியாக செய்ய வேண்டும் என்றும், வன்முறை மற்றும் அடக்குமுறைகளைத் தவிர்த்து, அன்றாட வாழ்வில், மோதல்களை எதிர்கொள்ள நாம் தொடர்ந்து செபிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மோதல்களை அமைதியான முறையில் தீர்க்கவும், பொது நன்மையைத் தேடவும், பாதுகாக்கப்பட்டவர்களின் கவனத்தை ஈர்க்கவும் எதிர்மறையை நேர்மறையால் வெற்றி கொள்ள வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்