தேடுதல்

திருத்தந்தையுடன் காங்கோ குடியரசின்  திருப்பீடத்தூதர்  பேராயர் Ettore Balestrero. திருத்தந்தையுடன் காங்கோ குடியரசின் திருப்பீடத்தூதர் பேராயர் Ettore Balestrero.  (Vatican Media)

நீதி மற்றும் ஒப்புரவின் திருத்தூதுப்பயணம்

60 இலட்சம் காங்கோ குடியரசின் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும், 55 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்வதற்கும் காரணமான வன்முறை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

காங்கோ குடியரசில் பகைமையும் வன்முறையும் ஆறாக ஓடும் நிலையில், அதனை நீதி மற்றும் ஒப்புரவின் பெருங்கடலாக மாற்றுவதற்கு உதவுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அந்நாட்டிற்கான திருத்தூதுப்பயணம் இருக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Ettore Balestrero.

Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு அளித்த நேர்முகத்தில் இதனை அறிவித்த பேராயர் Balestrero அவர்கள், பிப்ரவரி முதல் தேதி புதன்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட பகுதியின் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க உள்ளது அம்மக்களுடன் அவர் நெருக்கமாக இருக்க விரும்புவதைக் குறிப்பிடுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

60 இலட்சம் காங்கோ குடியரசின் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும், 55 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்வதற்கும் காரணமான வன்முறையை தன் திருப்பயணத்தின்போது திருத்தந்தை வன்மையாகக் கண்டிப்பார் என்று தன் கருத்தை நேர்முகத்தில் தெரிவித்துள்ளார் திருப்பீடத்தூதுவர்.

உதவிகள் தேவைப்படும் காங்கோ குடியரசு, பல வேளைகளில் உலக அரங்கில் மறக்கப்பட்டு வருவதால், அதன் மீது அனைத்துலக கவனம் திரும்ப திருத்தந்தையின் திருப்பயணம் உதவும் என அந்நாட்டு மக்கள் நம்புவதாக பேராயர் Balestrero மேலும் கூறியுள்ளார்.(ACN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2023, 13:11