6 பேருக்கு புனிதர் நிலைக்கான படிகளைத் துவக்க திருத்தந்தை அனுமதி
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொது நிலையினரான பெண், அருள்சகோதரி மற்றும் நான்கு அருள்பணியாளர்கள் என 6 பேருக்கு புனிதர் நிலைக்கான படிகள் துவங்க புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்திற்கு அனுமதி அளித்தார்.
சனவரி 19 வியாழன் அன்று புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marcello Semeraro அவர்களால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்று இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த இறையடியார் 6 பேருக்கு புனிதர் நிலைக்கான படிகள் துவக்கப்பட அனுமதி அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Miguel Costa y Llobera, Vicente López de Uralde Lazcano என்னும் ஸ்பெயின் அருள்பணியாளர்கள், இத்தாலியைச் சார்ந்த அருள்பணியாளர்களான Gaetano Francesco Mauro, Giovanni Barra, அருள்சகோதரி Maria Margherita Diomira, மற்றும் பொது நிலையினரான Bertilla Antoniazzi என்னும் 20 வயதுடைய பெண், என்பவர்களுக்கு புனிதர் நிலைக்கான படிகள் துவங்கப்பட இருக்கின்றன என்றும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறையடியார் Bertilla Antoniazzi இத்தாலியின் Venetoல் 1944ஆம் ஆண்டு முதல் 1964 வரை வாழ்ந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதில் dyspnoea என்னும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர். படுக்கையில் இருந்தாலும் தன்னுடைய செபத்தின் வழியாக துன்புறும் மக்களையும் பாவிகளையும் இறைவன் பக்கம் திருப்ப முயற்சித்தவர். மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் உடன் நோயாளிகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தியவர். தனது இந்த நிலைக்காக ஒருபோதும் இவர் வருந்தி புலம்பியவரில்லை.
இறையடியார் Miguel Costa y Llobera, ஸ்பெயின் நாட்டில் உள்ள Majorca வில் பிறந்தவர். இவர் காலம் 10.03.1854 – 16.10.1922 வரை ஆகும்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்