சீனத் திருஅவைக்கு அன்பும் ஆதரவும் காட்டிவந்த திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், வானகத்தில் இருந்துகொண்டு சீனத்திருஅவைக்காகத் தொடர்ந்து பரிந்துரைக்க வேண்டுமென வேண்டுவதாக சீனக்கத்தோலிக்கத் தலைவர்களும் விசுவாசிகளும் அறிவித்துள்ளனர்.
முன்னாள் திருத்தந்தையின் மறைவையொட்டி சைனாவின் பல்வேறு கோவில்களில் ஒன்று கூடி திருவாழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய சீனத்திருஅவை, முன்னாள் திருத்தந்தை, அப்போஸ்தலிக்க அக்கறையுடன் சீனத்தலத்திருஅவைக்கு அன்பும் ஆதரவும் காட்டிவந்ததை நினைவுகூர்ந்தது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த கோவில்கள் அனைத்தும் ஜனவரி ஒன்றாம் தேதியன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெய்ஜிங்க் பெருமறைமாவட்டத்தின் அனைத்துக் கோவில்களிலும் விசுவாசிகள், முன்னாள் திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபித்தனர்.
முனனாள் திருத்தந்தையின் மரணம் குறித்த சீனக்கத்தோலிக்கர்களின் ஆழ்ந்த கவலை, அவர் சீனத்திருஅவைக்கு ஆற்றியுள்ளவைகள் குறித்த நன்றியையும் உள்ளடக்கியதாக உள்ளது என உரைத்தார் சீனாவின் Lanzhou ஆயர் Joseph Han Zhi-hai.
தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாகச் செயல்பட்ட இறையடியாரான முன்னாள் திருத்தந்தை, நம் காலத்தின் திருஅவை வல்லுனராக இருந்தார் எனக் கூறியுள்ளார் Ba Meng ஆயர் Matthias Du Jiang.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்