தேடுதல்

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்  

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நமது காலத்தின் இறைவாக்கினர்

'இயேசு இறையாட்சியைக் கொண்டு வருகிறார்' என்பதே முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இதயத்தின் செய்தியாக இருந்தது : கர்தினால் Fernando Filoni.

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நமது காலத்தின் மிகச் சிறந்த இறைவாக்கினர் என்றும், திருவிவிலியத்தில் நாம் காணும் இறைவாக்கினர்கள்போல நமது தற்போதைய உலகில் கடவுளைப் பற்றி நம்மிடம் அவரால் பேச முடிந்தது என்று புகழாரம் சூட்டியுள்ளார் கர்தினால் Fernando Filoni.

பதினாறாம் பெனடிக்ட் உண்மையில் நம் காலத்தின் இறைவாக்கினராகத் தனக்குத் தோன்றுகிறது என்றும், ஏனென்றால், வேகமாக மாறிக்கொண்டிருக்கும் மற்றும் கடவுளை மறந்துகொண்டிருக்கும் இவ்வுலகத்தில் அவரைச் சந்திப்பதிலும் அவர் கொண்டுவரும் அழைத்தலை பெறுவதிலும் சிறந்து விளங்கினார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் Filoni.

கலாச்சாரரீதியாக அவர் ஏற்கனவே ஒரு இறையியலாளராக உருவாகியிருந்தாலும், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அனுபவத்தில் அவர் முதிர்ச்சியடைந்தவராக விளங்கினார் என்றும், அவரது வாழ்வில் கடவுள் அவரது அறிவார்ந்த செயல்களின் வளமைக்கும் ஒரு மேய்ப்பராகப் பணியாற்றுவதற்கும் இடையே இருந்த வேறுபாடுகளை புரிந்துகொண்டு செயல்படத் தூண்டியுள்ளார் என்றும் விவரித்துள்ளார் கர்தினால் Filoni.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் இயேசுவுடன் இணைந்த நிலையில், இறையாட்சியைப் போதிக்க விரும்பியவர் என்றும், அவரது 70 ஆண்டுகால அருள்பணித்துவ வாழ்வில், ஒரு குருவாக, ஆயராக, திருத்தந்தையாக இதனைத்தான் அவர் அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ள கர்தினால் Filoni அவர்கள், இயேசு அவருடைய இறையாட்சியைக் கொண்டு வருகிறார் என்பதே அவரது இதயத்தின் செய்தியாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2023, 15:09