தேடுதல்

ஆஸ்ட்ரிய ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஆஸ்ட்ரிய ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஆண்டவரின் நாளுக்காக தயாரிப்பதற்கு ஏற்ற காலம் இதுவே

Partenone பழங்கால கிரேக்கக் கோவிலின் உடைந்த மூன்று துண்டுகளை, ஏதென்ஸ் பேராயரான முதுபெரும்தந்தை 2ம் Ieronymos அவர்களுக்கு வழங்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

56வது உலக அமைதி நாளுக்கு தான் எழுதியுள்ள செய்தியை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 16, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.

ஆண்டவரின் நாளுக்காக நம்மையே நாம் தயாரிப்பதற்கு ஏற்ற காலம் இதுவே எனவும், தனியாட்கள், மற்றும், குழுமங்களாக மாற்றம் பெறுவதற்கு நம்மையே நாம் அனுமதித்துள்ளோமா எனச் சிந்திப்பதற்கு இதுவே சரியான காலம் எனவும் திருத்தந்தை தன் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியோடு, இவ்வுலக நாள் செய்தியை வாசிப்பதற்கு உதவியாக, இணையதள முகவரியும் https://www.vatican.va/content/francesco/en/messages/peace/documents/20221208-messaggio-56giornatamondiale-pace2023.html இணைத்து வழங்கப்பட்டுள்ளது.

கடவுள் தம் வாக்குறுதிகளில் பிரமாணிக்கமுள்ளவர், மற்றும், அவர் நம் பாதையின் படிகளை வழிநடத்துகிறார், விண்ணகம் நோக்கி தங்கள் கண்களைப் பதித்து பயணம் மேற்கொள்ளும் அனைவரின் பாதைகளின் படிகளை அவர் வழிநடத்துகிறார் என்ற சொற்கள் திருத்தந்தையின் 2வது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இவ்வெள்ளியன்று ஆஸ்ட்ரிய ஆயர்களையும் அத் லிமினாவை முன்னிட்டு சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

Partenone பழங்கால கிரேக்கக் கோவில்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில் உண்மையிலேயே நடப்பதன் அடையாளமாக, வத்திக்கான் அருங்காட்சியகத்தில் உலகின் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட, Partenone அதாவது பழங்கால கிரேக்கக் கோவிலின்  உடைந்த மூன்று துண்டுகளை, ஏதென்ஸ் மற்றும் கிரேக்க நாடு முழுவதன் பேராயரான ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை 2ம் Ieronymos அவர்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று திருப்பீடச் செய்தி தொடர்பகம் டிசம்பர் 16, இவ்வெள்ளியன்று அறிவித்துள்ளது.  

Partenone என்பது பழங்கால கிரேக்கப் பேரரசு காலத்தில் கி.மு. 447க்கும், 432க்கும் இடைப்பட்ட காலத்தில் பளிங்கு கல்லால் கட்டப்பட்ட மிக அழகான கோவிலாகும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2022, 14:15