தேடுதல்

இத்தாலிய தொழில் கூட்டமைப்பினர் சந்திப்பு இத்தாலிய தொழில் கூட்டமைப்பினர் சந்திப்பு  

தொழிற்சங்கங்களின்றி தொழிலாளர்கள் சுதந்திரமாக இருக்க இயலாது

தொழிலாளர் மத்தியில் உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்பவும், இலாபங்களைவிட மக்கள் முக்கியம் என்பதை உணர்த்தவும், தொழிற்சங்கங்கள் தொழில் குறித்த உணர்வை மக்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

தொழில் உலகில் பயனற்ற எதிர்ப்புக்களைத் தூண்டிவிடுவதைவிட கூட்டொருமையைக் கட்டியெழுப்புவர்களாக, அவ்வுலகின் காவலாளர்களாக இருங்கள் என்று இத்தாலிய தொழில் கூட்டமைப்பினரிடம் இத்திங்களன்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 19, இத்திங்களன்று CGIL எனப்படும் இத்தாலிய தொழில் கூட்டமைப்பின் ஏறத்தாழ ஆறாயிம் பேரை, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தொழிற்சங்கங்களின்றி தொழிலாளர்கள் சுதந்திரமாக வேலைசெய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் இன்றி தொழிற்சங்கம் கிடையாது, மற்றும், தொழிற்சங்கம் இன்றி சுதந்திரமாகச் செயல்படும் தொழிலாளர்கள் இல்லை என்றுரைத்த திருத்தந்தை, நவீனதொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும், தீர்மானம் எடுப்பவர்கள், நிபுணத்துவத்தின் அடிப்படையில் சிலநேரங்களில் தெரிவுசெய்யப்படுவதால் ஏற்படும் தவறில், தொழில் சார்ந்த உறவுகளில் நீதி குறித்த நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை என்று கூறியுள்ளார்.

தொழில் சமூகத்தைக் கட்டியெழுப்புகிறது

தொழில், சமூகத்தைக் கட்டியெழுப்புகிறது எனவும், இது குடியுரிமையின் முதன்மை வடிவமாகும், இதிலிருந்தே சமூகம் அதன் உருவைப் பெறுகிறது எனவும் கூறியத் திருத்தந்தை, மனிதர், மற்றும் அவர்களின் பொருளாதார-அரசியல் திட்டங்களுக்கு இடையேயுள்ள உறவுகள் வழியாக சனநாயக வாழ்வு நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மத்தியில் உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்பவும், இலாபங்களைவிட மக்கள் முக்கியம் என்பதை உணர்த்தவும் தொழிற்சங்கங்கள் தொழில் குறித்த உணர்வை மக்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இத்தாலிய தொழில் கூட்டமைப்பினர் சந்திப்பு
இத்தாலிய தொழில் கூட்டமைப்பினர் சந்திப்பு

தொழிலில் பாகுபாடு

தொழிலில் பாலினப் பாகுபாடு, இளையோருக்கு நிச்சயமற்ற வேலை, வேலைவாய்ப்பற்ற கலாச்சாரம், தொழிலாளரின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் மீறப்படல் போன்றவை  குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, பணியிடங்களில் இறப்புகள், காயமடைதல், உறுப்பிழப்புகள் போன்றவை இன்னும் இடம்பெறுவது குறித்த தன் கவலையையும் தெரிவித்துள்ளார்.

குரலற்றவர்களின் குரல்களாகவும், அவர்களுக்காகப் பரிந்துபேசுபவர்களாகவும், பணியிடங்களில்கூட அமைதியைக் கற்றுக்கொடுப்பவர்களாகவும் இருக்குமாறு தொழிற்சங்கங்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இச்சங்கங்கள் இளையோர் மீது அக்கறை காட்டுவதற்கு தன் நன்றியையும் தெரிவித்ததோடு, தொழிற்சங்கங்களை புனித யோசேப்பின் பாதுகாவலில் வைப்பதாகக் கூறி தன் ஆசிரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2022, 15:02