தேடுதல்

திருக்குடும்பத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2021 மெக்சிகோ)  திருக்குடும்பத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2021 மெக்சிகோ)  

மீட்பின் ஒளியைச் சுடர்விடும் திருக்குடும்பம் – திருத்தந்தை

திருக்குடும்பத்தின் ஒளி, மனித குடும்பங்களுக்குக் கடினமான சூழல்களில் நம்பிக்கையைத் தருகின்றது. - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருக்குடும்பம் இரக்கம், மற்றும் மீட்பின் ஒளியைச் சுடர்விட்டு வீசுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 30 வெள்ளியன்று திருக்குடும்ப விழாவைத் திருஅவை சிறப்பித்து மகிழும் வேளையில், திருக்குடும்பத்தின் ஒளி, மனித குடும்பங்களுக்குக்  கடினமான சூழல்களில் நம்பிக்கையைத் தருகின்றது என்பதை வலியுறுத்திக் குறுஞ்செய்தியினை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

குழந்தை இயேசு, அன்னை மரியா, மற்றும் புனித யோசேப்பு ஆகியோரை உள்ளடக்கிய திருக்குடும்பம், ஒவ்வொரு மனித குடும்பத்தின் மேலும் மீட்பு மற்றும் இரக்கத்தின் ஒளியினைச் சுடர்விட்டு ஒளிரச் செய்கின்றது எனவும், கடினமான சூழல்களில் வாழும் குடும்பங்களுக்கு மனித அரவணைப்பைக் கொடுத்து வலுவூட்டுகின்றது எனவும் தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2022, 12:58