தேடுதல்

உக்ரைனில் கிறிஸ்மஸ் உக்ரைனில் கிறிஸ்மஸ் 

திருத்தந்தை: உக்ரைனில் அமைதி நிலவ விண்ணப்பிப்போம்

போரினால் சிதைந்துபோயுள்ள உலகில் அமைதி நிலவ எனது விண்ணப்பத்தை மீண்டும் புதுப்பிக்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

டிசம்பர் 26, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான் திருநாளை முன்னிட்டு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின், அனைவரும் அமைதியை அனுபவிக்க வாழ்த்துவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித கிறிஸ்மஸின் மகிழ்வு மற்றும் மனஅமைதியின் ஆன்மிகச் சூழலில், இவ்வளாகத்தில் இருப்பவர்களிலும், ஊடகம் வழியாக இம்மூவேளை செப உரையில் பங்குகொண்ட அனைவரிலும், இன்னும், குடும்பங்கள், பங்குத்தளம், துறவுக் குழுமங்கள், இயக்கங்கள், கழகங்கள் என அனைத்திலும் அமைதி நிலவ மீண்டும் வாழ்த்துகிறேன் என்று திருத்தந்தை கூறினார்.

இவ்வளாகத்தில் உக்ரைன் நாட்டுப் பல கொடிகளைப் பார்க்கின்றேன், போரால் சிதைந்துபோயுள்ள உலகிலும் குறிப்பாக உக்ரைனிலும் அமைதி நிலவ எனது விண்ணப்பத்தை மீண்டும் புதுப்பிக்கிறேன் என்று கூறியத் திருத்தந்தை, உலகின் பல பகுதிகளிலிருந்து வாழ்த்தும் பரிசுகளும் அனுப்பியிருந்த எல்லாருக்கும், குறிப்பாக செபம் என்ற சிறப்புக் கொடைக்காக நன்றி சொல்கிறேன் என்று கூறினார்.

புனித ஸ்தேவான் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு, தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 டிசம்பர் 2022, 13:10