தேடுதல்

திருத்தந்தை, Denis Mukwege சந்திப்பு திருத்தந்தை, Denis Mukwege சந்திப்பு 

திருத்தந்தை, Denis Mukwege சந்திப்பு

மருத்துவரான Denis Mukwege அவர்கள், 1998ஆம் ஆண்டில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி, பாலியல் வன்கொடுமையால் உடலளவில் மிகவும் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பதில் உலக அளவில் புகழ்பெற்றிருந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

2018ஆம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Denis Mukwege அவர்களையும், திருப்பீடத்திற்கான வெனெசுவேலா நாட்டுப் புதிய தூதர் Ian Carlos Torres Parra அவர்களையும் டிசம்பர் 09, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

அர்ஜென்டினாவின் Mendoza பேராயர் Marcelo Daniel Colombo, இத்தாலியின் Ascoli Piceno மறைமாவட்ட பேராயர் Gianpiero Palmieri, பரகுவாய் Asunción பேராயர் கர்தினால் Adalberto Martínez Flores ஆகியோரும் இவ்வெள்ளி காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துள்ளனர்.

1955ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி காங்கோ சனநாயக குடியரசின் Bukavu பிறந்த Denis Mukwege அவர்கள், மருத்துவர் மற்றும், கிறிஸ்தவ சபையின் போதகர். மகளிர் நோய் மருத்துவயியல், மற்றும், தாய்மை மருத்துவத்தில் சிறந்திருந்த இவர் 1998ஆம் ஆண்டில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி, பாலியல் வன்கொடுமையால் உடலளவில் மிகவும் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பதில் உலக அளவில் புகழ்பெற்றிருந்தார். 

2014ஆம் ஆண்டில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் கருத்து சுதந்திரத்திற்கான Sakharov விருதையும் பெற்றார் Denis Mukwege.

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்று வானதாதர் கபிரியேல் அன்னை மரியாவிடம் கூறிய வார்த்தைகளை நினைக்கும்போது, கடவுளின் உதவியோடு அமைதி இயலக்கூடியதே, ஆயுதக்களைவு இயலக்கூடியதே, ஆயினும் கடவுள் நம் நல்மனதை விரும்புகிறார், கடவுளின் திட்டங்களுக்கு நாம் மனம்மாற அன்னை மரியா நமக்கு உதவுவாராக எனவும் திருத்தந்தை, டிசம்பர் 08, இவ்வியாழனன்று மூவேளை செப உரைக்குப்பின் கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2022, 14:15