தேடுதல்

கர்தினால் Severino Poletto கர்தினால் Severino Poletto  

கர்தினால் பொலெத்தோவின் ஆன்மா நிறையமைதிடைய செபம்

கர்தினால் பொலேத்தோ அவர்களின் மறைவோடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 224 ஆகவும், அவர்களில் எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆகவும் மாறியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று, தனது 89வது வயதில் இறைபதம் சேர்ந்த இத்தாலிய கர்தினால் Severino Poletto அவர்களின் ஆன்மா நிறையமைதியடையத் தான் செபிப்பதாகவும், அவர் திருஅவைக்கு ஆற்றிய நற்பணிகளுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

கர்தினால் பொலெத்தோ அவர்களின் இறப்பையொட்டி, இத்தாலியின் தூரின் பேராயர் இராபர்த்தோ ரேபோலே அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், தன் மறைமாவட்டத்தில் மறைப்பணிக்கு ஊக்கமளித்தது, தன் பகுதியிலுள்ள திருஅவைகளைச் சீரமைத்தது, மறைமாவட்ட அருள்பணியாளர்களை வழிநடத்தியது என கர்தினால் பொலேத்தோ அவர்கள் ஆற்றியுள்ள பல்வேறு நற்பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தூரின் நகரின் முன்னாள் பேராயராகிய கர்தினால் பொலேத்தோ அவர்கள், Fossano மற்றும்,  Asti மறைமாவட்டங்களில் ஆயராகப் பணியாற்றியிருப்பவர். இவர் தூரின் உயர்மறைமாவட்ட தலைமைப் பணியிலிருந்து 2010ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். நீண்டகாலம் நோயுற்றிருந்த இவர் டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று இறைபதம் சேர்ந்தார்.  

கர்தினால் பொலேத்தோ அவர்களின் மறைவோடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 224 ஆகவும், அவர்களில் எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆகவும் மாறியுள்ளன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2022, 15:12