தேடுதல்

நாத்சிகளால் கொல்லப்பட்ட Ulma  குடும்பம் நாத்சிகளால் கொல்லப்பட்ட Ulma குடும்பம்  

அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள Ulma குடும்பம்

போலந்து நாட்டின் மறைச்சாட்சிகளான Giuseppe, Vittoria Ulma தம்பதியரும், அவர்களின் ஏழு பிள்ளைகளும், எட்டு யூதர்களுக்கு உதவியதற்காக 1944ஆம் ஆண்டில் நாத்சிகளால் கொல்லப்பட்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

போலந்து, பிரேசில், உருகுவாய், இத்தாலி, சீனா, ருமேனியா, அர்ஜென்டீனா, ஜிம்பாபுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 11 பேர் அருளாளர்களாகவும், 13 பேர் புதிய இறை ஊழியர்களாகவும் அறிவிக்கப்பட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று அனுமதியளித்துள்ளார்.

புனிதர், மற்றும், அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் மர்செல்லோ செமெராரோ அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து, இவர்களின் மறைச்சாட்சிய மற்றும், புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

1881ஆம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த உருகுவாய் நாட்டு இறை ஊழியரான Montevideo ஆயர் Giacinto Vera அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை இடம்பெற்றுள்ளதன் வழியாக அவர் அருளாளராக உயர்த்தப்படும் படிநிலைகள் தொடங்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டின் Markowaவின் இறைஊழியர்கள் Giuseppe, Vittoria Ulma தம்பதியரும், அவர்களின் ஏழு பிள்ளைகளும், எட்டு யூதர்களுக்கு உதவியதற்காக 1944ஆம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நாத்சிகளால் கொல்லப்பட்டனர். இந்த தாய் கொல்லப்படும்போது அவரது ஏழாவது குழந்தையைக் கருவில் தாங்கியிருந்தார். Ulmaவின் பெற்றோர் Józef மற்றும் Wiktoriaவும் அவர்களோடு சேர்ந்து கொல்லப்பட்டனர்.

பிரேசில் நாட்டின் Jacareíவில் 1981ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இறந்த Francesco de Castro Holzwarth என்ற பொதுநிலை கத்தோலிக்கர், ஒரு கட்டத்தில் சிறையில் இருந்தவர். இவர் தனது வாழ்வை கிறிஸ்தவ நம்பிக்கைக்காகக் கையளித்தவர். இவர் 1942ஆம் ஆண்டு பிறந்தவர்.  

அருள்பணி மத்தேயோ ரிச்சி

அருள்பணி மத்தேயோ ரிச்சி சே.ச.
அருள்பணி மத்தேயோ ரிச்சி சே.ச.

இத்தாலியின் Macerataவில் 1552ஆம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பிறந்த இயேசு சபை அருள்பணி மத்தேயோ ரிச்சி அவர்கள், சீனாவின் பெய்ஜிங்கில் 1610ஆம் ஆண்டு மே 11ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

இன்னும் சிலரின் வீரத்துவப் புண்ணியப் பண்புகள் ஏற்பு

1982ஆம் ஆண்டில் இறந்த இத்தாலியின் மறைமாவட்ட அருள்பணி Ugo De Blasi;  

போலந்தின் போஸ்னானில் 1983ஆம் ஆண்டில் இறந்த மறைமாவட்ட அருள்பணி Alessandro Woźny;

போலந்தின் Puszczykowoல் 1984ஆம் ஆண்டு இறந்த மறைமாவட்ட அருள்பணியாளரும், போலந்து புலம்பெயர்ந்தோருக்கென கிறிஸ்து அரசர் மறைப்பணியாளர் அருள்சகோதரிகள் சபையைத் தொடங்கியவருமான Ignazio Posadzy;

ருமேனியாவின் Oneştiல் 1986ஆம் ஆண்டில் இறந்த பிரான்சிஸ்கன் சபை அருள்பணி Martin Benedict;

அர்ஜென்டீனாவின் Santa Feல் 1942ஆம் ஆண்டில் இறந்த இயேசு சபை அருள்பணி Giuseppe Marco Figueroa;

இத்தாலியின் நேப்பிள்ஸில் 1926ஆம் ஆண்டில் இறந்த, புனித அந்தோனியார் பிரான்சிஸ்கன் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்த Giulia Bonifacio;

இத்தாலியின் Seriateல் 1934ஆம் ஆண்டில் இறந்த, Asolaவின் இயேசுவின் திருஇதய ஊர்சுலைன் அருள்சகோதரிகள் சபையைத் தொடங்கிய Maria Ignazia Isacchi;

இத்தாலியின் உரோமில் 1974ஆம் ஆண்டில் இறந்த இறையன்பின் தியாகிகள் அருள்சகோதரிகள் சபையைத் தொடங்கிய Margherita Crispi;

இத்தாலியின் Varallo Sesiaவில் 1994ஆம் ஆண்டில் இறந்த, என்றென்றும் குருவான இயேசுவின் மறைப்பணியாளர் அருள்சகோதரிகள் சபையைத் தொடங்கிய  Margherita Maria Guaini;

இஸ்பெயின் பார்செலோனாவில் 1956ஆம் ஆண்டில் இறந்த பங்குப்பணி மூன்றாம் சபையை ஆரம்பித்த Maddalena Aulina Saurina;

இத்தாலியின் Sant’Agata Bologneseவில் 1950ஆம் ஆண்டில் இறந்த வியாகுல அன்னையின் சிறிய அருள்சகோதரிகள் சபையின் அருள்சகோதரி Teresa Veronesi;

ஜிம்பாபுவே நாட்டின் Mutokoவில் 1979ஆம் ஆண்டில் இறந்த இத்தாலியரானமருத்துவ மறைப்பணியாளர் பெண்கள் கழகத்தைச் சார்ந்த பொதுநிலையினர் Luisa Guidotti Mistrali

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2022, 16:11