தேடுதல்

திருத்தந்தை, ஜோர்டன் அரசர் 2ம அப்துல்லா அல் ஹூசைன்  திருத்தந்தை, ஜோர்டன் அரசர் 2ம அப்துல்லா அல் ஹூசைன்  

புனிதர்கள், இறைவிருப்பத்தை அச்சமின்றி நிறைவேற்றியவர்கள்

ஜோர்டன் அரசர் இரண்டாம் அப்துல்லா அல் ஹூசைன் அவர்கள், தன் துணைவியாரோடு நவம்பர் 10, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனிதர்கள் என்பவர்கள், வேறொரு பிரபஞ்சத்திலிருந்து வருபவர்கள் அல்ல, மாறாக, அவர்கள் தங்களின் குடும்பங்களோடு அன்றாட வாழ்வில் ஈடுபட்டிருந்த நம்பிக்கையாளர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 10, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

“புனிதர்கள் என்பவர்கள், நாம் வாழ்கின்ற பிரபஞ்சத்திற்கு இணையான மற்றொரு பிரபஞ்சத்திலிருந்து வருகிறவர்கள் அல்ல, மாறாக, அவர்கள், படிப்பு மற்றும், பணியில், தங்களின் குடும்பங்களோடு தினசரி வாழ்விலும், சமூக, பொருளாதார, மற்றும், அரசியல் வாழ்விலும் வேரூன்றப்பட்டிருந்த நம்பிக்கையாளர்கள். இவையனைத்திலும் இவர்கள், கடவுளின் திருவிருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அச்சமின்றி செயல்பட்டவர்கள்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

“புனிதத்தன்மையின் எடுத்துக்காட்டுகள், மற்றும், Divinus Perfectionis Magister (1983) என்ற திருத்தூது கொள்கைத் திரட்டு வெளியிடப்பட்டதிலிருந்து நாற்பது ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள புனிதர்கள்” என்ற தலைப்பில், உரோம் பாப்பிறை இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் மூன்று நாள் கருத்தரங்கையொட்டி, இந்நாள்களில் புனிதர்கள் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் விளக்கி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சந்திப்புக்கள்

மேலும், ஜோர்டன் அரசர் இரண்டாம் அப்துல்லா இபின் அல் ஹூசைன் அவர்களும், ருமேனியா நாட்டு அரசி மார்கிரேட், இளவரசர் Radu மற்றும், அவர்களோடு சென்றிருந்த பிரமுகர்களும், இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

இன்னும், இவ்வியாழன் காலையில், கனடா நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Raymond Poisson, அப்பேரவையின் உதவித்தலைவர் ஆயர் William Terrence McGrattan, அதன் பொதுச் செயலர் அருள்பணி Jean Vézina ஆகிய மூவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2022, 15:06