திருத்தந்தை: புனிதர்களிடமிருந்து வாழ்வியல் கல்வி கற்போம்
மேரி தெரேசா: வத்திக்கான்
நம் வாழ்வில் கடவுள் செயல்படும்முறை குறித்து புனிதர்களின் வாழ்வு வெளிப்படுத்துவதை அறிந்துகொள்ள முயற்சிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 07, இத்திங்களன்று கூறியுள்ளார்.
நம் வாழ்வில் கடவுள் செயல்படுவதை நாம் புரிந்துகொள்ளும் முறையில் எடுத்துரைக்கும் புனிதர்களின் வாழ்வுப் பாடத்தை வாசிப்போம், ஏனெனில் புனிதர்கள், நம்மைப் போன்று, சதை மற்றும், குருதியால் ஆக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் எழுப்பும் இந்நவம்பர் மாதத்தில் புனிதர்களை மையப்படுத்தி இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, புனிதர்களின் செயல்கள், நம் செயல்பாடுகளோடு உரையாடல் நடத்துகின்றன மற்றும், அவர்கள் கூறவிரும்புவதைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்புகள்
மேலும், திருப்பீட கலாச்சாரம் மற்றும், கல்வித் துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk, அர்ஜென்டீனாவின் San Juan de Cuyo பேராயர் Jorge Eduardo Lozano, திருப்பீட இறையியல் கழகத்தின் தலைவர் ஆயர் Antonio Staglianò, அருங்காட்சியகம் மற்றும், கலாச்சாரச் சொத்துகளின் உதவி பொது இயக்குனர் பேரருள்திரு Paolo Nicolini, பணியை முடித்துத் திரும்பும் சுவிஸ் கார்ட்ஸ் ஆகியோரும் இத்திங்களன்று திருப்பீடத்தில் திருத்தந்தையை தனியே சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்