தேடுதல்

புனிதர்கள் திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் பேராயர்  ஆஸ்கார் ரொமேரோ புனிதர்கள் திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ 

நம்பிக்கை கடந்தகால கண்காட்சி அல்ல-திருத்தந்தை.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களோடு மேலும் ஐவர் புனிதராக உயர்த்தப்பட்டனர்.

மெரினா ராஜ் -வத்திக்கான்

நம்பிக்கை என்பது கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை அழகாக காட்சிப்படுத்தும் கண்காட்சியாக  அல்ல, மாறாக அன்றாட வாழ்க்கையில் இயேசுவை எதிர்கொள்கின்ற நிகழ்கால செயலாக  இருக்கவேண்டும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கண்காட்சியில் இடம்பெறும் கடந்த கால நிகழ்வல்ல, மாறாக  அன்றாடம் வாழ்க்கைச் செயல்களில் இயேசுவை எதிர்கொள்கின்ற நிகழ்கால நிகழ்வு நமது நம்பிக்கை  என்றும், இயேசுவின் புதுப்பித்தல் தன்மைக்கும் இயேசுதான் புதுப்பித்தல் என்பதற்கும் சாட்சியாக வாழ, சோர்வடையாமல், மனம் தளராமல் இருங்கள் எனவும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை 6ம் பவுல் புனிதர்பட்டமளிப்பு  நாள்

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி  புனித பேதுரு பெருங்கோவில்  வளாகத்தில், திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, அருள்பணியாளர்களான பிரான்செஸ்க்கோ ஸ்பிநெல்லி, வின்சென்சோ ரொமானோ, அருள் சகோதரிகளான மரிய கத்தரீனா காஸ்பெர், நசாரியா இஞ்ஞாசியா, மற்றும் 19 வயதான இளையவர், நுன்சியோ சுல்பிரிசியோ ஆகிய எழுவர் புனிதராக உயர்த்தப்பட்டனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்  உலகின் பல நாடுகளிலிருந்து ஏறக்குறைய 70,000த்திற்கும் அதிகமான மக்கள், ஸ்பெயின் நாட்டு அரசி, மற்றும் இத்தாலிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2022, 14:55