இறைஆற்றல் கொண்டு செயல்படுங்கள்- திருத்தந்தை
மெரினா ராஜ் -வத்திக்கான்
கவலை, ஏமாற்றம், தோல்வி, சந்தேகம் கொண்டு வாழும் இளையோருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துரைத்து நம்பிக்கையூட்டி வலுப்படுத்தும் உங்கள் பணி இறை ஆற்றலால் நிரப்பப்பட தொடர்ந்து பணியாற்றுங்கள் என்று பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்து மாணவர்களிடையே பணியாற்றுபவர்களிடம் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
அக்டோபர் 7 இவ்வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், சுவிட்சர்லாந்து மாணவர்கள் பள்ளியில், ஆலயப்பணிபுரிபவர்கள் சிலரை திருத்தந்தை சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
வருத்தத்திலும் தோல்வியிலும் இருக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டும் இவர்கள் பணி பாராட்டுக்குரியது என்றும், செபம், பாராட்டு, புன்னகை, உரையாடல் போன்ற நடைமுறை வாழ்க்கை செயல்முறைகளின் வழியாக அத்தகையோரோடு உடனிருந்து ஆற்றும் பணி மிக முக்கியமானது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி, சந்தேகம் கவலை போன்றவற்றினால் வருந்தும் மாணவர்களோடு உடன் நடக்கும் பொழுது எம்மாவூஸ் சீடர்கள் பெற்ற அனுபவம் நம்மில் புதுப்பிக்கப்படுகின்றது எனவும், இவை அவரவர் ஆற்றலினால் நடப்பதல்ல மாறாக இறைஆற்றலால் நடக்கின்றது எனவும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இத்தகையோர் வாழ்வில் கிறிஸ்து கடந்து செல்லும்போது, அவரது ஆற்றல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் இவர்களின் உடனிருப்பு அம்மாணவர்களின் வாழ்வில் அதிக பலனைத்தருவதாக, முக்கிய தேவையாக உள்ளது எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்