உலக அமைதிக்கான வான் பயணம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உலக அமைதிவேண்டுகோளுக்கு தங்களது ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும், உக்ரைனில் போர் அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் சன் மரினோ நாட்டு விமான அமைப்பு உரோம் நகருக்கு ஒரு பயணம் மேற்கொண்டது.
அக்டோபர் 8 , இச்சனிக்கிழமை காலை தொராச்சே விமானதளத்தில் இருந்து புறப்பட்ட 5 சிறிய எளிமையான விமானங்கள் உரோம் விமான நிலையத்தில் வந்து தரையிறங்கின. அங்கிருந்து சன் மரினோ விமான நிறுவனத்தின் முக்கிய விமானிகள், செயலர் மற்றும் திருப்பீடத்தின் தூதுவர் மரியா அலெசாண்ட்ரா ஆல்பர்டினி அனைவரும் இணைந்து திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்தனர்.
ஆயுதங்கள் மற்றும் அழிவைக் கொண்டுவருவதற்காக அல்ல மக்களையும் கலாச்சாரங்களையும் ஒன்றிணைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இவ்விமான அமைப்பு,"மக்களுக்கு இடையிலான தூரத்தை கடக்க முடியும் என்பதை உண்மையாக்கி, நாடுகளுக்கு இடையே கலாச்சாரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு உதவியாக உள்ளது என்றும், மனித உயிர்களை காப்பாற்ற தொலைதூர இடங்களை சென்றடைய உதவுகின்றது என்றும், சன் மரினோ நாட்டின் மரியா லூயிசா பெர்டி கூறியுள்ளார்.
100 பங்குதாரர்களைக் கொண்டு 37 ஆண்டுகளாக செயல்படும் சன் மரினோ என்னும் விமான அமைப்பு, வான்விளையாட்டு ஆவல் உடைய நபர்களால் 1985 ஆம் ஆண்டு torracce வில் உள்ள quatro querce என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது. முதன் முதலில் அஞ்சல் விமானமாக சான் மரினோ மற்றும் இத்தாலி இடையே செயல்பட்ட இவ்விமான அமைப்பு, 1986 ஆம் ஆண்டில் விமான பயிற்சிபள்ளிச் செயல்பாடுடன் தொடங்கப்பட்டது.
வான்வழி கண்காணிப்பு, அவசரகால மீட்பு, பொது ஒழுங்கு புகைப்படம் மற்றும் வான்வழி படப்பிடிப்பு ஆகியவற்றிற்காக சிவில் பாதுகாப்பு மற்றும் சிவில் காவல்துறையுடன் ஒரு கூட்டுறவு செயலில் இவ்விமான அமைப்பு செயல்படுகின்றது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்