உறவைப் புதுப்பிக்க உதவிய உரையாடல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தையை சந்தித்து தான் மேற்கொண்ட உரையாடல், தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவைப் புதுப்பித்ததாகவும், ஆசை, ஆர்வம், கேள்விகள், பொதுநலமுன்னேற்றத்திற்கான முயற்சிகள் போன்றவற்றில் இருவருக்கும் இடையே இருக்கும் ஒத்தக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அது அமைந்தது என்றும் கூறியுள்ளார் கட்டடக் கலைஞர் Renzo Piano .
அக்டோபர் 21 இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கான் அலுவலகத்தில் தன் மனைவி எமிலியாவுடன் சந்தித்து மகிழ்ந்த ஜெனீவா கட்டடக் கலைஞர் Renzo Piano அவர்கள், அச்சந்திப்பு பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.
திருத்தந்தையின் ஒத்த வயதுடையவரான Renzo Piano, சகோதரரே என்று திருத்தந்தையை அழைத்து மகிழ்ந்ததாகவும், போருக்கு முந்தைய காலகட்டம், இளையோர், பொது நலன், கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி போன்றவைப் பற்றிக் கலந்துரையாடியதாகவும் அதில் இருவரின் கருத்துக்களும் ஒத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
இன்றைய இளையோர் தாங்கள் பெற்ற அனுபவத்தைப் பெறவில்லை எனவும், இன்றைய காலகட்டம் சிறந்த முன்னேற்றங்களைத் தராமல், தொற்றுநோய்ப் பரவல், காலமாற்றம், போர், உணவுப்பற்றாக்குறை, போன்றவற்றின் வழியாக அச்சத்தை மட்டுமே அதிகளவில் தருகின்றது எனவும் எடுத்துக்கூறி, அமைதிக்கான கட்டிடங்கள் பல எழுப்பப்பட்டாலும், அமைதி இன்னும் முழுமையாக வரவில்லை என்பன போன்றாவற்றைப் பற்றிக் கலந்துடையாடியதாகவும் எடுத்துரைத்துள்ளார் Renzo Piano
1936 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி பிறந்த திருத்தந்தை தன்னை விட வயதில் 9 மாதம் மூத்தவர், ஞானத்தில் 90 வருடம் மூத்தவர் என்றும், அவருடனான சந்திப்பு, மனதிற்கு மிகுந்த மகிழ்வை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் Renzo Piano.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்