தேடுதல்

ஊர்சுலின் கல்வி நிறுவனம்  ஊர்சுலின் கல்வி நிறுவனம்  

"உள்ள அழகை ஒளி வீசச்செய்யுங்கள்" - திருத்தந்தை.

ஊர்சுலின் உலக கல்வி அமைப்பினரிடம், இருத்தல், செயல்படுதல் என்னும் இரண்டை மையப்படுத்தி உள்ள அழகுடன் செயல்பட கேட்டுக் கொண்டுள்ளார் திருத்தந்தை .

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகம் கருதும் அழகை அல்ல, உள்ள அழகை ஒளி வீசச்செய்யுங்கள் எனவும், இயேசு வலியுறுத்திய பகிர்வின் அழகை செயல்களின் வழியாக வெளிப்படுத்துங்கள் எனவும்  ஊர்சுலின் உலக கல்வி அமைப்பினர்க்கு  வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 30 வெள்ளியன்று ஊர்சுலின் உலக கல்வி அமைப்பினரை வத்திக்கானில் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவ்வமைப்பு உருவாக காரணமான ஊர்சுலா என்னும் அழகான பெண்ணின் கல்விப் பணி மற்றும் அவரது உடன் பணியாளர்களின் சிறப்பான செயல் போன்றவற்றையும்  பாராட்டியுள்ளார்.

அழகின்றி கல்வி இல்லை, உள்ள அழகின்றி உடல் அழகு இல்லை என எடுத்துரைத்து,  இவ்வுலகம் கருதும் அழகில் மயங்கி துன்புற்றவர்கள் போலல்லாது,  உண்மை அழகாம் உள்ள அழகோடு செயல்பட  கேட்டுக் கொண்டார் திருத்தந்தை .

உண்மை அழகு எப்போதும் நல்ல பலனைத் தரும் எனவும், அது இயேசு போல நன்மை செய்ய நம்மை ஊக்கப்படுத்தி, செயல்பாடுகளின் வழியாக நம்மை இணைக்கின்ற அழகு எனவும்  எடுத்துரைத்தார்.  மேலும், இருத்தல், செயல்படுதல் என்னும் இரண்டினை மையப்படுத்தி நமது வாழ்வு எப்போதும் அழகானதாக இருக்க வலியுறுத்தினார். திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2022, 14:22