திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  2019ம் ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட  படைப்பின் காலம் புகைப்படத்தை பார்க்கும் பொழுது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட படைப்பின் காலம் புகைப்படத்தை பார்க்கும் பொழுது.  

படைப்பின் பாடல், ஆன்மிக சூழலியலை நடைமுறைப்படுத்த...

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 01 - அக்டோபர் 04 வரை படைப்பின் காலம் சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

இயற்கை உலகில் கடவுளின் இருப்பு மீது கவனம் செலுத்தி, ஆன்மிகச் சூழலியலை நடைமுறைப்படுத்த, படைப்பின் இனிமைமிகு பாடல் நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 06, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தை மையப்படுத்தி, தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளை வெளியிட்டு வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று படைப்பின் காலம் (#SeasonofCreation) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்தும் கிறிஸ்து வழியாகப் படைக்கப்பட்டுள்ளன மற்றும், “உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை” (யோவா.1:3) என்பதை உணர்ந்து, நம் வாழ்வில் ஆன்மிகச் சூழலியலை வாழ்ந்துகாட்ட படைப்பின் இனிமைமிகு நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், திருத்தந்தை அக்குறுஞ்செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

படைப்பின் காலம்

கிறிஸ்தவர்கள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் தேதியன்று, படைப்பைப் பாதுகாப்பதற்கு இறைவேண்டல் செய்யும் உலக நாளாகச் சிறப்பித்து வருகின்றனர். மேலும், அதே நோக்கத்திற்காக செப்டம்பர் ஒன்று முதல், படைப்பின் பாதுகாவலராகிய அசிசி நகர் புனித பிரான்சிசின் திருநாளாகிய அக்டோபர் 4ம் தேதி வரை, படைப்பின் காலம் என்ற நிகழ்வையும் கிறிஸ்தவர்கள் சிறப்பித்து வருகின்றனர்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்வில் பங்கேற்ற தைவான் சென்
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்வில் பங்கேற்ற தைவான் சென்

தாய்வானின் Chen Chien-jen

மேலும், செப்டம்பர் 04, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்ட திருப்பலியில், தாய்வான் அரசுத்தலைவர் Tsai Ing-wen அவர்களின் சிறப்புப் பிரதிநிதியாக கலந்துகொண்ட தாய்வானின் முன்னாள் உதவி அரசுத்தலைவர் Chen Chien-jen அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து தாய்வானுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கத்தோலிக்கரான Chen Chien-jen அவர்கள், பாப்பிறை அறிவியல் கழகத்தின் உறுப்பினரும் ஆவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2022, 14:38