தேடுதல்

கஜகஸ்தானின் தலைநகரான  நூர் சுல்தான் கஜகஸ்தானின் தலைநகரான நூர் சுல்தான்  

சோவியத்திடமிருந்து பிரிந்து சென்ற கடைசி நாடு கஜகஸ்தான்

சோவியத்திடமிருந்து சுதந்திரம்பெற்ற கஜகஸ்தானில் காசாக்கி இனத்தவர் 63 விழுக்காட்டினரும், இரஷ்யர்கள் 24 விழுக்காட்டினரும், உஸ்பெக்கி மக்கள் 3 விழுக்காட்டினரும், உக்ரேனியர்கள் 2 விழுக்காட்டினரும் வாழ்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுத் தூதுவர்களுடனான சந்திப்பிற்குப் பின் திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி நித்திரைக்குச் செல்வதுடன் திருத்தந்தையின் செவ்வாய்தின பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வரும். இரண்டரை நாள் கொண்ட இத்திருத்தூதுப்பயணத்தில் 5 உரைகளையே ஆற்ற உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் நாள் பயண நிகழ்வுகளை நிறைவுச் செய்துள்ளார். இத்திருத்தூதுப் பயணம் நன்முறையில் வெற்றியடைய நம் செபங்கள் வழி உதவுவோம்.

சோவியத் யூனியனுக்குள் ஒரு குடியரசாகத் தன் சுயாட்சியை 1990ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி அறிவித்த கஜகஸ்தான் நாடு, 19991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி தன்னை சுதந்திர நாடாக அறிவித்து, சோவியத்திடமிருந்து பிரிந்துச் சென்ற கடைசி நாடானது. இது நடந்த 10 நாட்களுக்குப் பின் சோவியத் யூனியன் என்பதே மறைந்து, சுருங்கி இரஷ்யாவானது. சோவியத்திடமிருந்து சுதந்திரம்பெற்ற கஜகஸ்தானில் காசாக்கி இனத்தவர் 63 விழுக்காட்டினரும், இரஷ்யர்கள் 24 விழுக்காட்டினரும், உஸ்பெக்கி மக்கள் 3 விழுக்காட்டினரும், உக்ரேனியர்கள் 2 விழுக்காட்டினரும் வாழ்கின்றனர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களாக உள்ள நிலையில், ஒரு விழுக்காட்டினரே கத்தோலிக்கர். எனினும், இங்கு 5  மறைமாவட்டங்கள், 6 ஆயர்கள், 81 பங்குத் தளங்கள், 146 மறைப்பணித் தளங்கள், 78 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 26 துறவற அருள்பணியாளர்கள், 133 பெண் துறவறத்தார்,  7 உயர் குருமட மாணவர்கள் உள்ளனர்.

இந்நாட்டில் செப்டம்பர் 14, புதன்கிழமையன்று, உலகப் பெரிய மற்றும் பூர்வீக மதங்களின் ஏழாவது கருத்தரங்கில் உரையாற்றுவது, அங்குள்ள மதத்தலைவர்களுள் சிலரைத் தனித்தனியாகச் சந்திப்பது, பொருட்காட்சி மைதானத்தில் மாலை திருப்பலி  நிறைவேற்றுவது ஆகியவை இடம்பெறும். செப்டம்பர் 15, வியாழன் நிகழ்ச்சியாக, தலத்திருஅவையின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும் துறவறத்தாரைச் சந்தித்தபின், உலக மதங்களின் தலைவர்கள் தயாரித்துள்ள இறுதி அறிக்கையை வெளியிடும் நிகழ்வினைத் தொடர்ந்து அதேநாளில் உரோம் நகர் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2022, 15:41