திருத்தந்தை: கடவுள் பொறுமையோடு நம்மோடு பயணிக்கிறார்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஆண்டவர் நம்மிடமிருந்து தமது அன்பை துண்டித்துக்கொள்வதில்லை, நம்மீது அவர் பொறுமை இழப்பதில்லை, மற்றும், தம் மீதுள்ள நம்பிக்கையை மீண்டும் மீண்டும் கனிவோடு வழங்குவதில் அவர் சோர்வுறுவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 10, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள், நம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறார், பொறுமையோடு நம்மோடு பயணிக்கிறார் மற்றும், அவர் நம்பிக்கையிழப்பதில்லை, அதேநேரம், அவர் தமது நம்பிக்கையை எப்போதும் நம்முள் படிப்படியாக உணர்த்துகிறார் என்று கூறியுள்ளார்.
சந்திப்புகள்
செப்டம்பர் 10, இச்சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில், திருத்தந்தையின் பிரதிநிதிகளோடு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, அர்ஜென்டீனா திருப்பீடத் தூதர் பேராயர் Miroslaw Adamczyk ஆகியோரையும் தனித்தனியே சந்தித்துப் பேசியுள்ளார்.
18வது தேசிய திருநற்கருணை மாநாடு
மேலும், பிரேசில் நாட்டில் நடைபெறும் 18வது தேசிய திருநற்கருணை மாநாட்டில் தனது பிரதிநிதியாகப் பங்குபெறுவதற்கு, Leiria-Fátimaவின் முன்னாள் ஆயரான கர்தினால் António Augusto Dos SANTOS MARTO அவர்களை, செப்டம்பர் 10, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசிலின் Olinda மற்றும், Recife உயர்மறைமாவட்டத்தில் இவ்வாண்டு நவம்பர் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை 18வது தேசிய திருநற்கருணை மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்