திருத்தந்தையின் வியாழன் நிகழ்வுகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே, வியாழன் காலையில் திருப்பீடத்தூதரகத்தில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலையிலேயே, அந்நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினரைச் சந்தித்து உரையாடுவார். அதன் பின் தலைநகரிலுள்ள அன்னை மரியா பேராலயத்தில் அந்நாட்டு ஆயர்கள் அருள்பணியாளர்கள் ஆண் பெண் துறவறத்தார், அருள்பணி பயிற்சி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து உரை வழங்க உள்ளார்.
மாலையில் இந்த ஏழாவது உலகப் பெரிய, மற்றும் பூர்வீக மதங்களின் கருத்தரங்கு நிறைவு நிகழ்விலும், அதன் இறுதி அறிக்கை வெளியீட்டிலும் கலந்து கொண்டு உரையாற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்துடன் கஜகஸ்தான் நாட்டிற்கான இரண்டரை நாள் திருத்தூதுப்பயணத்தை நிறைவுச்செய்து வியாழனன்றே வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்