தேடுதல்

உக்ரைன் நாட்டுத் தூதர் Andrii Yurash சந்திப்பு உக்ரைன் நாட்டுத் தூதர் Andrii Yurash சந்திப்பு 

உக்ரைன் நாட்டுத் தூதர் Andrii Yurash சந்திப்பு

திருப்பீடத்திற்கான உக்ரைன் நாட்டுத் தூதர் Andrii Yurash, அர்ஜென்டீனா நாட்டு நீதிபதி Daniel Horacio Obligado ஆகியோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இயேசுவின் சீடர்களாக, புனிதப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கு, முதலில் கடவுளன்பின் வல்லமையால் தோற்றமாற்றம் அடைய நம்மை நாம் அனுமதிக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 06, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட ஆண்டவரின் தோற்றமாற்றம் விழாவை மையப்படுத்தி, தன் டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில், “இயேசுவின் சீடர்களாக இருப்பதும், புனித வாழ்வுப் பாதையில் முன்னேறுவதும் என்பது, இறையன்பின் சக்தியால் தோற்றமாற்றம் அடைய நம்மையே நாம் அனுமதிப்பதாகும், இதுவே அவற்றுக்கு முதலும் முக்கியமானதுமாகும்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இயேசுவின் தோற்றமாற்றம் விழா

இயேசுவின் தோற்றமாற்றம் விழா, 7ம் நூற்றாண்டளவில் எருசலேமிலும், 9ம் நூற்றாண்டில் பைசான்டைன் பேரரசின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படத் தொடங்கியது என வரலாறு கூறுகிறது. இவ்விழா படிப்படியாக மேற்குலகிலும் பரவத் தொடங்கியது. ஆயினும், 1456ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, பெல்கிரேடில் கிறிஸ்தவர்கள், துருக்கிய முஸ்லிம்களோடு போரிட்டு வெற்றியடைந்ததற்கு ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும்வண்ணம், அப்போதைய திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸ் அவர்கள், 1457ஆம் ஆண்டில் இவ்விழா ஆகஸ்ட் 6ம் தேதி, அகில உலகத் திருஅவையில் சிறப்பிக்கப்படுமாறு பணித்தார்

சந்திப்புகள்

மேலும், கர்தினால் Giuseppe Versaldi, அல்ஜீரியா மற்றும், துனிசியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Kurian Mathew Vayalunkal, திருப்பீடத்திற்கான உக்ரைன் நாட்டுத் தூதர் Andrii Yurash, அர்ஜென்டீனா நாட்டு நீதிபதி Daniel Horacio Obligado, ரோமன் ரோட்டா நீதிமன்றத்தின் தலைவர் பேராயர் Alejandro Arellano Cedillo ஆகியோரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை   இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2022, 16:03