தேடுதல்

கோடைமுகாம் குழந்தைகளுடன் திருத்தந்தை கோடைமுகாம் குழந்தைகளுடன் திருத்தந்தை  

கோடைமுகாம் குழந்தைகளை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை

“கல்வியின் மீது குழந்தைகள் கொண்டுள்ள ஆர்வம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க உதவுங்கள்” : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானிலுள்ள கோடைகால இளையோர் முகாமின் குழந்தைகளை வாழ்த்துகிறேன் என்றும், அவர்களுடன் அவர்தம் பெற்றோர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு, அவர்களின் விலைமதிப்பற்ற பணிக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 03, இப்புதனன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை நிகழ்விற்குப் பிறகு கோடைகால இளையோர் முகாமின் குழந்தைகளைச் சந்தித்தபோது இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இம்முகாமை மூன்றாவது ஆண்டில் வழிநடத்திச் செல்லும் சிறந்த சலேசிய அருள்பணியாளரும் ஆன்மிகவாதியுமான அருள்பணியாளர் Franco அவர்களுக்கு நன்றிகூற விரும்புவதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு, ஒரு சிறிய அறையில் இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்று, நன்றி கூறி, அவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துரை ஒன்றை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியின் மீது குழந்தைகள் கொண்டுள்ள ஆர்வம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க உதவுங்கள் எனக் கூறி அவர்களை ஊக்குவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2022, 14:59