போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் 

துன்புறும் உக்ரேனியர்களோடு திருத்தந்தை ஒருமைப்பாடு

அமைதி நிலவும்போது நாம் எதையும் இழப்பதில்லை, ஆனால் போர் இடம்பெறும்போது நாம் எல்லாவற்றையும் இழக்கிறோம் - திருத்தந்தை 12ம் பயஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

தொடர்ந்து கடுமையான போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டில், கடுந்துயரங்களோடு வாழ்ந்துவரும் அந்நாட்டு மக்களோடு தன் அருகாமையை, ஆகஸ்ட் 21, இஞ்ஞாயிறன்றும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அந்நாட்டு மக்களுக்காக உறுதியான மனநிலையோடு தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் மற்றும், அவர்களோடு நம் உடனிருப்பைத் தெரிவிப்போம் என்று  திருத்தந்தை, திருப்பயணிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், உக்ரைனில் போரினால் துன்புறும் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இவ்வாண்டு ஜூன் மாதம் 5ம் தேதியிலிருந்து, இதுவரை ஆற்றியுள்ள மூவேளை செப உரைகளுக்குப்பின், 13வது தடவையாக இஞ்ஞாயிறன்று உக்ரைனில் அமைதி நிலவ விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரஷ்யாவின் குண்டுவீச்சுகளுக்கு, உக்ரைன் இராணுவம் பதிலடி கொடுத்துவரும்வேளை, இத்தாக்குதல்களில் அப்பாவி பொது மக்களே அதிகம் துன்புறுகின்றனர். உக்ரைனின் Zaporizhzhia அணுமின் நிலையம் குண்டுவீச்சுக்களால் தாக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியிலிருந்து 324 சிறார் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று, ஆகஸ்ட் 20, இச்சனிக்கிழமையன்று வெளியான செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, ஆகஸ்ட் 21 இஞ்ஞாயிறன்று உக்ரைனில் போர் தொடங்கி 179 நாள்கள் ஆகியிருக்கும்வேளை, அமைதி நிலவும்போது நாம் எதையும் இழப்பதில்லை, ஆனால் போர் இடம்பெறும்போது நாம் எல்லாவற்றையும் இழக்கிறோம் என, ஏறத்தாழ  நூறு ஆண்டுகளுக்குமுன்னர், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறியதை, போரிடும் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2022, 12:40