தேடுதல்

திருத்தந்தையுடன் மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி இளவரசி சார்லின் திருத்தந்தையுடன் மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி இளவரசி சார்லின் 

மொனாக்கோவின் இளவரசர் & இளவரசியுடன் திருத்தந்தை சந்திப்பு

நல்ல சமாரியர் உவமை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், அவர்களைக் கவனித்துக்கொள்ளவும் நம்மைத் தூண்டுகிறது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி இளவரசி சார்லின் ஆகியோரை வத்திக்கானில் சந்தித்து உரையாடியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 20, இப்புதனன்று, திருப்பீடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு ஏறத்தாழ 20 நிமிடங்கள் தொடர்ந்தன என்றும், இறுதியிலே திருத்தந்தை அவர்களுடன் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொண்டார் என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இச்சந்தித்தபோது, ​​ஒரு குழந்தை மற்றொரு குழந்தையைத் தரையிலிருந்து எழுந்திருக்க உதவும் ஒரு வெண்கலச் சித்தரிப்பை அவ்விருவருக்கும் பரிசாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், இந்தப் படம் நல்ல சமாரியரின் உவமையால் ஈர்க்கப்பட்டதாகவும், அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் இது அழைப்பு விடுக்கிறது என்றும் திருப்பீடச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு, உலக அமைதி தினத்திற்கான தனது செய்தி மற்றும் உடன்பிறந்த உணர்வுநிலை பற்றிய ஆவணம் ஒன்றையும் அவர்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், இளவரசர் ஆல்பர்ட் தனது சார்பாக, மொனாக்கோவின் அரச அரண்மனையில் அமைந்துள்ள புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் கலை ஓவியம் ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கியுள்ளார் என்றும் திருப்பீடச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2022, 15:05