தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் ,அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா திருத்தந்தை பிரான்சிஸ் ,அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா  

இத்தாலிய அரசுத்தலைவரின் பிறந்த நாளுக்கு திருத்தந்தை வாழ்த்து

SERGIO MATTARELLA நாட்டின் வளர்ச்சிக்காக, நாட்டில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் என்றும், முழுமையான மற்றும் ஆழமான ஒத்துழைப்போடும் அர்ப்பண மனநிலையோடும் பணிகளைச் செய்பவர் என்றும் அவரைக் குறித்துப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை

மெரினா ராஜ்: வத்திக்கான்

இத்தாலி நாட்டின் அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்து தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

மத்தரெல்லா அவர்களின் உயர்ந்த மனதிற்காகவும், இத்தாலிய மக்கள் மீது அன்பு கொண்டு அவர் ஆற்றும் உயர்ந்த பணிக்காகவும், அவருடைய பிறந்த நாளில் தன்னுடைய மகிழ்வான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறிய திருத்தந்தை, நாட்டின் வளர்ச்சிக்காக, நாட்டில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் என்றும், முழுமையான  மற்றும், ஆழமான ஒத்துழைப்போடும் அர்ப்பண மனநிலையோடும் பணிகளைச் செய்பவர் என்றும் அவரைக் குறித்துப் பாராட்டியுள்ளார்.

மத்தரெல்லா அவர்களுக்கு வாழ்த்துக் கூறும் அனைவரோடும் இணைந்து தன்னுடைய வாழ்த்தையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, அவரது குடும்பத்தார், உடன் பணியாளர்கள் அனைவருக்கும் தன்னுடைய ஆசீர்வாதத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

திருத்தந்தையின் சிறப்பு பிரதிநிதிகள்

ஐரோப்பிய இளையோர்க்கான திருப்பயண நிறைவுக் கொண்டாட்டம் பிரான்சில் உள்ள  Santiago de Compostela வில் ஆகஸ்ட் 3 முதல் 7 வரை நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Leiria-Fatimaவின் முன்னாள் பேராயரான, கர்தினால் António Augusto dos SANTOS MARTO, அவர்களை சிறப்புப் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2022, 14:39