திருத்தந்தை: விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஜூலை 24, இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப செபத்தை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் சொல்ல முடியாவிட்டாலும் இப்பயணத்தில் நாம் சொல்வோம் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இத்திருத்தூதுப் பயணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, என்னால் இப்பயணத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என நினைக்கின்றேன், சேர்ந்து பயணிப்போம் எனவும், கடுமையான துயரங்களை எதிர்கொண்டுள்ள பூர்வீக இன மக்களோடு எனது அருகாமையைத் தெரிவிக்கும் ஆவலோடு இப்பயணத்தை மேற்கொள்கிறேன் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார். மெக்சிகோ நாட்டுத் தொலைக்காட்சியின் Televisa அலைவரிசையின் பத்திரிகையாளர் Valentina Alazraki அவர்களை, இப்பயணத்தில் பார்த்தபோது திருத்தந்தை தன் மகிழ்ச்சியையும் தெரிவித்தார் என்று புரூனி அவர்கள் கூறியுள்ளார். வலெந்தினா அவர்கள் அண்மையில் வத்திக்கானில் திருத்தந்தையை பேட்டி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்விமானப் ப.யணத்தில் தான் கடந்துசென்ற இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா, ஐஸ்லாந்து, டென்மார்க், கிரீன்லாந்து ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு விமானத்திலிருந்தே, நாடுகளின் ஒன்றிப்பு, மற்றும், அமைதிக்காகச் செபிப்பதாகத் தெரிவித்து, தன் நல்வாழ்த்துத் தந்திகளையும் அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கனடாவில், ஒரு தவத் திருப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு பூர்வீக இனங்களின் மக்களுக்கு வழங்கவிருக்கும் மன்னிப்பு, மற்றும் ஒப்புரவு செய்திக்காக அவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கனடாவுக்கு 1984, 1987 மற்றும், 2002ஆம் ஆண்டுகளில் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அத்திருத்தந்தை 1987ஆம் ஆண்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், கனடாவின் கியூபெக் நகரில் புனித Anne de Beaupré தேசிய திருத்தலத்தில் பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்தார். அச்சமயத்தில், பூர்வீக இன மக்களின் மாண்பை அறிவிக்கவும், அவர்களின் வாழ்வுக்கு ஆதரவாகவும் வந்துள்ளேன் என்று அத்திருத்தந்தை கூறியுள்ளார். Huron இனத்தவர் மத்தியில் இயேசு சபையினரின் புனித மரியா (Sainte-Marie) மறைப்பணித்தளத்திற்குச் சென்றபோது, அங்குள்ள மறைசாட்சிகள் திருத்தலம், பல்வேறு கலாச்சாரங்கள் மத்தியில் நம்பிக்கை, மற்றும், ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். இத்திருத்தந்தையின் பாதையைப் பின்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஒன்றிணைந்து நடப்போம்” என்ற தலைப்பில், கனடாவில் தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார். அப்பயண நோக்கம் நிறைவேற இறைவனை நாம் மன்றாடுவோம். கனடாவில் ஆறு நாள்கள் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, இம்மாதம் 30ம் தேதி இத்தாலிய நேரம் காலை 7.50 மணிக்கு உரோம் வந்துசேர்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்