தேடுதல்

Maskwacis முன்னாள் மாணவர் விடுதிப் பள்ளி Maskwacis முன்னாள் மாணவர் விடுதிப் பள்ளி  

கனடாவின் Maskwacis பகுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்

Maskwacisல், அக்காலத்தில் கனடாவின் பூர்வீக இன மக்களுக்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை செய்த கொடுமைகளுக்கு திருத்தந்தை மன்னிப்பு கேட்பார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜூலை 25, இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 6.30 மணிக்கு, எட்மன்டன் நகரின் புனித யோசேப்பு கல்லூரியில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றியபின்னர், அங்கிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற Maskwacisவுக்கு காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கனடாவின் Alberta மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள Maskwacis பகுதியில் First Nations எனப்படும் பூர்வீக இனத்தின் Ermineskin குழுமம் அப்பகுதியின் வடக்கேயும்,   Samson குழுமம், அதன் தென் பகுதியிலும் வாழ்ந்து வருகின்றன. அங்கு இவர்களைத் தவிர First Nations இனத்தின் மற்ற பிரிவுகளும் வாழ்ந்து வருகின்றன. 1884 மற்றும், 1885ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், Maskwacis பகுதியில் கத்தோலிக்க மறைப்பணித்தளத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்த அருள்பணி Constantine Scollen அவர்கள், பல்வேறு பூர்வீக இனங்களின் மக்களைக் குறிக்கும் விதமாக அப்பகுதியை "Bear குன்றுகள்" என்றே அழைத்தார். 1891ஆம் ஆண்டில் Calgary மற்றும், Edmontonக்கு இடையே அந்நாட்டின் முதல் இரயில் பாதை அமைக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில், அப்பகுதி, டச்சு நாட்டு ஓவியர் Meindert Hobbema என்பவர் பெயரால், Hobbema என அழைக்கப்பட்டது. இதற்குப் பின்னர்தான் இப்பகுதியில் வாழ்ந்த பூர்வீக இனங்கள், First Nations என அழைக்கப்பட்டன. First Nations குழுமத்தில், Ermineskin Cree Nation, Louis Bull இனம், Montana First Nation, Samson Cree Nation ஆகிய நான்கு இனத்தவர், இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், "Bear குன்றுகள்" என்ற பெயர், 2014ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று, Maskwacis என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. Maskwacis பகுதியில்தான் Ermineskin பூர்வீக இனத்தவரின் முன்னாள் மாணவர் விடுதிப் பள்ளி அமைந்திருந்தது. இப்பள்ளி, கனடாவின் பூர்வீக இனத்தவரின் முன்னாள் மிகப்பெரிய மாணவர் விடுதிப் பள்ளிகளில் ஒன்றாகும். இங்கு திருத்தந்தை, அக்காலத்தில் கத்தோலிக்கத் திருஅவையால் அப்பூர்வீக இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Maskwacisல் இவ்வின மக்களை திருத்தந்தை சந்திக்கத் தொடங்கும்போது இந்திய-இலங்கை நேரம் இத்திங்கள் இரவு 9 மணி 30 நிமிடங்களாக இருக்கும்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2022, 15:30