தேடுதல்

லிபியாவில் போராட்டம் லிபியாவில் போராட்டம்  

லிபியாவில் ஒப்புரவு நிலவ திருத்தந்தை அழைப்பு

லிபியாவில், 2021ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த அரசுத்தலைவர் தேர்தல், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நாடு தழுவிய போராட்டங்கள் இடம்பெற்றுவரும் லிபியாவில், ஆக்கப்பூர்வமான உரையாடலும் ஒப்புரவும் இடம்பெறவும், ஜூலை 10, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லிபியா நாட்டில் நிலவும் கடுமையான சமூக மற்றும், பொருளாதாரப் பிரச்சனைகளால் துன்புறும் மக்களை, குறிப்பாக, இளையோரை நினைக்கின்றேன், உலகளாவிய சமுதாயத்தின் உதவியோடு, உறுதியான உரையாடல் மற்றும், தேசிய ஒப்புரவு நடவடிக்கைகள் வழியாக, இப்பிரச்சனைகளுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வுகள் காணப்படுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

2011ஆம் ஆண்டில் லிபியாவின் சர்வாதிகாரி Muammar Gaddafi ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதிலிருந்து அந்நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப் போராட்டங்கள் 2020ஆம் ஆண்டில் இடம்பெற்ற இடைக்காலப் போர் நிறுத்தத்தால் முடிவுற்றன.

அதைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த அரசுத்தலைவர் தேர்தல், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறவில்லை. இம்மாதத் துவக்கத்தில் போராட்டக்காரர்கள், Tobruk நகரில் நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கி, அதற்குத் தீ வைத்தனர். தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2022, 12:55